இந்த காலத்தில் உலகில் ஏராளமானோர் மூலநோயினால் அவதிப்பட்டு வருகின்றனர்.
காரணம்:-
பெரும்பாலும் மலச்சிக்கலால் ஏற்படுகிறது.
எதனால் மலச்சிக்கல்:-
வெளியிடங்களில் சாப்பிடும், பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவினாலும்,
காரம், இறைச்சி வகைகள்,
நொறுக்குத்தீனி அதிகம் உண்பதாலும்
சரியான அளவு நீர் அருந்தாமல் இருப்பதும் மலச்சிக்கல் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:-
!) ஆசன வாயில் தொடர்ந்து ரத்தம் வருவது.
2) மலம் கழிக்கையில் வலி இருப்பது.
3) ஆசன குழாய் வெளியில் துருத்திக் கொண்டு உள்திரும்பாமல் நிற்பது.
சிகிச்சை:-
முன்பெல்லாம் அறுவை சிகிச்சை மூலம், துருத்திக் கொண்டுவரும் ஆசன குழாயை நீக்கி விடுவார்கள். அதனால் மலம் கழிக்க வேண்டிய உணர்வு தோன்றியதுமே, அடக்கி நிறுத்த முடியாத சிரமமான நிலையாக இருக்கும்.
இப்போதெல்லாம் நவீன மருத்துவ கண்டுபிடிப்பான லேசர் சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதால், மூலநோய் மீண்டும் வராமல் தடுத்திட முடியும்.
மூலநோயினால் அவதி படுபவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:-
1) தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். தினசரி 3 லிட்டர்.
2) காரம் மிக்க உணவுகள், பாஸ்ட் புட் (துரித உணவு) வகைகள் தவிர்க்க வேண்டும்.
3) பழங்கள், கீரை வகைகள், காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
4) நொறுக்கு தீனி சாப்பிடுபவர்கள், அரிசிபொறி, அவுல் பொறி, நெல்பொறி, அவுல் ஆகியவற்றுடன் எதுவும் கலக்காமல் சாப்பிட்டு, வேறு நொறுகுதீனிகளை தவிர்க்கவும்.
5) டீ, காபி, ஆல்கஹால் (மது, குளிர் பானங்கள்) தவிர்க்க வேண்டும்.
6) அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.
7) நாள் தோரும் இரண்டு வேளை, ஒரு டீஸ்பூன் பாகற்காய் ஜீஸ், அத்துடன் சர்க்கரை சேர்த்தும் சாப்பிடலாம்.
No comments:
Post a Comment