இந்தியாவில் சுமார் 20 பேருக்கு ஒருவர் என்ற முறையில், 6 கோடிக்கு மேல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு தொடர் மருத்துவம் செய்துக்கொண்டு வருகின்றனர். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறியாமலே இருப்பவர்கள் கோடிக்கணக்கில் இருக்கலாம். இந்தியாவில் சர்க்கரை நோய் பரவுவதற்கு முக்கிய காரணம், உணவு பழக்க மாற்றம், மது அருந்துதல் அதிகரித்ததும் காரணமாக இருக்கலாமென மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
முன்பெல்லாம் எங்கள் குடும்பத்தில் யாருக்குமே சர்க்கரை நோய் இல்லையே என மருத்துவரிடம் கேட்டால், மூதாதையர் பரம்பரை மூலக்கூறு மூலாமாய் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என கூறுவார்கள். ஆனால் இன்றோ, உணவு பழக்க மாற்றமும், மது பழக்கம் காரணமாகவும் புதிதாக சர்க்கரை நோய் வர வாய்ப்பிருக்கிறது.
நம் முன்னோர்களின் உணவு வகைகளை, பழக்கத்துக்கு ஏற்றபடி சிறிது மாற்றம் கொண்டாலும், காலநேரத்தை சரியாய் கடைப்பிடிப்பதும், ஒரே நேரத்தில் அதிக உணவை உண்பதற்கு பதிலாக, காலை 8 மணிக்கு சிற்றுண்டியும், காலை 11மணிக்கு முளை கட்டிய பருப்பு வகை ஏதேனும் ஒன்றும், 2 மணிக்கு மதிய உணவும், மாலை 5 மணிக்கு சிறிது சர்க்கரை இல்லா பிஸ்கட்டும், சர்க்கரை சேர்க்காத டீயும், இரவு 8 மணிக்கு இரவு உணவு அளவுடன் முடித்துக்கொண்டால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். நலமாகவும் வாழலாமென மருத்துவர்களின் ஆலோசனையாக இருக்கிறது.
இருப்பினும், தங்கள் உடல் நிலையை மருத்துவரிடம் பரிசோதித்து, அவரின் அறிவுரையின்படி உணவு பழக்கத்தை சரி செய்த்துக் கொள்வது மேலும் சால சிறந்ததாகும்.
உணவு பழக்கத்தை சரிசெய்வீர்.
உடல் நலத்துடன் வாழ்வீர்.
No comments:
Post a Comment