இந்தோனேசியாவில் உள்ள பாலித்தீவில் ஆண்டுக்கொரு முறை, "நேப்பி தினம்" என்ற பெயரால், ஒரு நாள் அத்தீவு முழுவதும் அரசின் சார்பில் அனுஷ்டிக்கப்படுகிறது.
அன்று, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சர்வதேச விமான நிலையம், ரேடியோ, டிவி, வாகனபோக்குவரத்து என்று எதுவுமே இருக்காது. தனி நபர்கள் கூட சாலையில் நடமாடமாட்டார்கள்.
மக்களும், வீட்டில் மௌன விரதம் அனுஷ்டிப்பதுடன், இறைவழிபாடு, புனித நூல்களை வாசித்தல் (ஒலிபெருக்கிகள் வைக்காமல், வீட்டுக்குள் மட்டும் மெதுவாக வாசித்தல் ) போன்ற ஆன்மீகபணிகளில் ஈடுபடுவர்.
ஒலி மாசுபாடின்றி இருக்க வேண்டியதின் அவசியத்தையும், விழிப்புணர்வை இம்மௌன விரதம் ஏற்படுத்துகிறது. பந்த் என்றால் மட்டுமே பரபரப்பு ஓய்ந்திருப்பது என்பது இந்தியாவில் உள்ள நடைமுறையாக இருக்கிறது. பாளி தீவின் இம்மௌன விரதம் உலக நாடுகளால் கவனத்தை ஈர்த்து வருகிறது.
No comments:
Post a Comment