பெரும்பாலான மக்களால், பரவலாகவும், சிறப்பாகவும், தரமானதாகவும், மக்களால் விரும்பப்படுகின்ற வகையில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு, ஒரு உன்னத தரச் சான்றாக புவியியல் குறியீட்டு எண் பெறுவது வழக்கத்தில் உள்ளது.
அதனால் மற்றவர்கள் அதற்கான உரிமையை கோரமுடியாது. காஞ்சிபுரம் பட்டு, மைசூர் சந்தன சோப், ஹைதராபாத் ஹலீம், கொண்டப்பள்ளி பொம்மைகள், பத்தமடை பாய் என மேலும் சில பொருட்கள் இருந்தாலும், பெரும்பான்மையான பொருட்கள் தரத்துடன் இருப்பினும், புவியியல் குறியீட்டு எண் பெறுவது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. இச்சூழ்நிலையை அரசு உணர்ந்து புவியியல் குறியீட்டு எண் பெற்று நம் தமிழகத்தில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு பெருமையையும், உரிமையையும் பெற்றுத்தர முன்வரவேண்டும்.
புவியியல் குறியீட்டு எண் பெறத்தக்க வகையில் உள்ள சில தரமான பொருட்களும், ஊர் பெயர்களும்:-
1) விருதுநகர் மாவட்டம், கல்குறிச்சியில் தயாரிக்கப்படும், சிறிதளவு என்னையும் ஒட்டாத, சீவல்,சேவு.
2) விருதுநகர் அருகே பாலவநத்தத்தில் கருப்பட்டியில் தயாரிக்கப்படும் "ஜீரணி" பிரபலமானது.
3) வேம்பார் கருப்பட்டி,
4) உடன்குடி சில்லுகருப்பட்டி.
5) திருச்செந்தூர் கீழஈரால் சீவல்.
மேலும் பல பொருட்கள் உள்ளது. தமிழக அரசு, முன் வரவேண்டும் புவியியல் குறியீட்டு எண் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment