தொடர்ந்தே அரைக்க,
வெளிப்பார்வை முகமோ
புன்னகை சிந்த,
விழிகளுக்கு வெளியே
வறட்சியை காட்டி,
அணைக்குள் நீராய்
தேங்கியே நிற்க.
நேரமது கிடைத்தால்
போதுமென்றே நினைத்தே,
தளும்பும் நீரும்
வழிந்து விட பார்க்க.
உறவுடன் நட்பின்
கும்மாளத்திற்கிடையே,
இழையிடை நூலாய்
சுற்றியே வரினும்,
தனக்குள் தவித்தான் (ள்)
தனலிலிட்ட புழுவாய்.
No comments:
Post a Comment