Translate

Saturday, November 16, 2013

கல்வியில் போலி...



பிரிகேஜி எனப்படும் பாலப்பள்ளிகலிலிருந்து, யுனிவர்சிடி எனப்படும் பல்கலைக்கழகங்கள் வரை, உரிமமே பெறாமல் கல்வி சாலைகளையும், பாட பிரிவுகளையும் தொடங்கி நடத்துவது. இவற்றை கட்டுப்படுத்தும் அமைப்போ, என்றேனும் தூங்கி விழித்தது போல், இவற்றுக்கு அங்கீகாரம் இல்லையென அறிக்கை விடுவது வாடிக்கையாக இருக்கிறது. 

கல்வி நிறுவனங்களோ தேவையான உரிமங்களைப் பெறாமலே, செய்து விட்டு, மாணவர்களின் வாழ்க்கை பாழ்படுகிறது என மாணவர்களின் பெற்றோரையும் இணைத்துக் கொண்டு ஒப்பாரி வைக்க வேண்டியது. கட்டுப்படுத்தும் அமைப்பும், அரசாங்கமும், மாணவர்களின் வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு, நீடிப்பு வழங்கப்படுகிறது என கூறி வாய்தாவும் வழங்கப்படும்.

ஆனால், பாட்டி பெயர் கிழவி என்பதுபோல, உரிமப்பேச்சு கிடப்புக்கு போய்விடும். மீண்டும் வருமானம் கிடைக்காதபோது கிண்டுவார்கள் இதை. கோடிகோடியாய் பணம் சம்பாரித்துக் கொண்டிருக்க, ஆயிரம் லட்சம் என்று அபராதம். என்ன கொடுமையடா இது?

இன்றைய நாளிதழில், இந்தியாவில் 9 மாநிலங்களில், 21 போலி பல்கலைகள் செயல்படுவதாகவும், தரும் பட்டங்கள் செல்லாது என்றும், இதில் மாணவர்கள் படிக்க வேண்டாமென்றும், மாநில வாரியாக பட்டியலையும் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அறிவித்துள்ளது.

1) இச்செய்தியை எத்தனை மாணவர்கள் படித்திருக்க போகிறார்கள்?

2) தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ளது, விரும்பும் பாடத்திட்டம் உள்ளது, பல்கலையில் நம்மை சேர்த்துக் கொள்கிறார்கள், 

3) இதையும் மீறி தெரிந்து அனுமதி பற்றி யாராவது கேட்டால் இந்த வருடத்தில் கண்டிப்பாக அனுமதி கிடைத்து விடும் என்ற வாய்வழி உறுதிமொழி. அந்த உறுதி மொழியை நம்பக் காரணம் தாண்டவாடும் இலஞ்சம், அதிகார மீறல் இருப்பதை மக்களும் மாணவர்களும் உணர்ந்திருப்பதால்.

4) அவ்வப்போது அனுமதி குறித்து பிரச்சனைகள் தோன்றினாலும், கல்வி நிலையங்களும், மாணவர்களும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். காரணம், நிர்வாக அமைப்பு, அரசாங்கம், நீதிமன்றம் எதுவாயிருப்பினும் மாணவர் நலம் என்ற கருத்துடன், அனுமதி விஷயத்தை அப்படியே கிடப்பில் போட்டு விடுவதென்று.

5) போலி என்றுதான் தெரிகிறதே, சேராதீர்கள் என அறிவுறுத்துவதை விட, அந்த கல்விநிலையங்களை மூட உத்திரவு போட்டு, சீல் வைத்தல், கல்வி நிறுவனத்தை பறிமுதல் செய்தல், நிர்வாகிகளை கைது செய்தல், மாணவர் நலம் கெடக்கூடாது என நினைத்தால்,யு.சி.ஜியே கையகப்படுத்தி ஏற்று நடத்துதல் அல்லது மாணவர்களை வேறு கல்வி நிலையங்களுக்கு மாற்றி, அதற்குரிய நட்டங்களையும், செலவுகளையும் ஏற்றுக் கொண்டு செயல்பட்டால், இதுபோன்று யாராவது போலி கல்வி நிறுவனங்களை துவாக்குவார்களா? துவக்க முன்வருவார்களா?

மாநில வாரியாக போலி பல்கலைகள்:

# தமிழகம்
1 ) டி.டி.பி., சம்ஸ்கிருத பல்கலைக்கழகம் - புதூர், திருச்சி

# பிஹார்
2) மைதிலி பல்கலைக்கழகம் / விச்வவித்யாலையா- தர் பன்ங்கா

# டில்லி
3) வணிக பல்கலைக்கழகம் லிமிடெட் - டில்லி
4) ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் - டில்லி
5) தொழிற்கல்வி பல்கலைக்கழகம் - டில்லி.
6) ஏ.டி.ஆர்., மைய நீதி பல்கலைக்கழகம் - டில்லி
7) இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் - டில்லி

#கர்நாடகா
 படகன்வி சர்கார் உலக திறந்தவெளி பல்கலைக்கழக கல்விச் சங்கம் - பெல்காம்

#கேரளா
9) செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம் - கிஷனட்டம்

# மத்திய பிரதேசம்
10) கேசர்வானி வித்யாபத் - ஜபல்பூர்

# மஹாராஷ்ட்டிரா
11) ராஜா அரபு பல்கலைக்கழகம் - நாக்பூர்

# மேற்கு வங்கம்
12) இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆல்டர் நேட்டிவ் மேடிசன் - கொல்கத்தா

# உத்தரபிரதேசம்
13) வாரணாசிய சமஸ்கிருத விஸ்வவித்யாலையா - வாரணாசி
14) மகிளா கிராம் வித்யாபத் / விஸ்வவித்யாலையா ( மகளீர் பல்கலைக்கழகம் ) - அலஹாபாத்
15) காந்தி ஹிந்தி வித்யாபத் பிரயாகை - அலஹாபாத்
16) எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி தேசிய பல்கலைக்கழகம் - கான்பூர்
17) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திறந்த வெளி பல்கலைக்கழகம் - அலிகார்
18) உத்திரபிரதேசம் விஸ்வவித்யாலையா - மதுரா
19) மகாராண பிரதாப் சிக்ஷா நிகேதன் விஸ்வவித்யாலையா - பிரதாப்கார்
20) இந்திரபிரஸ்தா சிக்ஷா பரிஷத் - நொய்டா
21) குருகுல விஸ்வவித்யாலையா - மதுரா

இப்படி பட்டியல் இட்டிருக்கிறார்கள். நமக்குள் சந்தேகம் வராமலா... பல்கலைக்கழகம் என்றாலே.. அதில் அடங்கிய அல்லது இணைப்புக் கல்லூரிகள் இருக்குமே. அவை எத்தனையோ? அவையும் போலியோ? தமிழ்நாட்டில் ஒன்றுதானா? கணக்கில உட்டுட்டான்களோ என்னமோ? 
என்ன கேவலமடா? கடவுளே...இதற்கு என்ன தீர்வோ?

No comments: