பாசத்தினால் பெற்றோர் தற்கொலை, மகனும் சாவு.
ஈரோடு-ஐ சேர்ந்த பாலசுப்ரமணி 46 வயது. மனைவி சண்முகவடிவு 40 வயது. திருமணம் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு முதல் ஆண் குழந்தையாக வருண் பிறக்க, 4 வயதான வருணுக்கு, சில மதங்களுக்கு முன் 'பிரைன் டியூமர்' என்ற மூளை புற்று நோய் ஏற்பட்டதை அறிந்து சிகிச்சை அளித்து வந்தனர். இன்னும் சில நாட்களில் வருண் இறந்து விடுவான் என மருத்துவர்கள் தெரிவித்ததால், மனமுடைந்த பெற்றோர், 17 வருடங்களுக்கு பின் பிறந்த மகன், எங்கள் கண் முன் இறப்பதை காண முடியாதென கடிதம் எழுதி வைத்து விட்டு, கடந்த அக்டோபர் 28ம் தேதி விஷம் அருந்தி, காளிங்கராயன் வாய்காலில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டனர்.
பெற்றோர் இறந்த 12 நாட்களில் வருணும் சிகிச்சைப் பலனின்றி இறந்தது, உறவு, நட்பு, தெரிந்தவரென அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
* பாசத்திற்கு அளவேது. அம்மூவரின் ஆத்மாக்கள் சாந்தியடைய பிரார்த்திப்போம்.
No comments:
Post a Comment