படிப்புக்கு கடன் வழங்குவது வங்கியின் கட்டாய கடமைகளில் ஒன்று.
வங்கிக்கு விண்ணப்பத்தை பதிவு தபாலில் அனுப்பினாலும், நேரில் கொடுத்தாலும் வங்கி ரசீது தர வேண்டும்.
வங்கியில் பெற்றோர்களின் எந்த கடன் இருந்தாலும், கல்விக்கு கடன் தர மறுக்க முடியாது.
குடும்ப சூழ்நிலையை, கல்விக்கடன் விண்ணப்பிப்போர் சொல்லத்தேவையில்லை.
ஒரு குடும்பத்தில் ஒரு மாணவனோ மாணவியோ கடன்கல்விக்கடன் பெற்றிருந்தால் கூட, அவர்களின் சகோதர சகோதரிகளுக்கு கல்விக் கடன் தர மறுக்கக் கூடாது.
கல்விக்கடனுக்கு எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
மூன்றாண்டுகள் தராமல் இருந்தால் கூட, முதலாண்டில் விண்ணப்பித்திருந்தால், மூன்று ஆண்டுகளுக்குறிய தொககையைப் பெற்றுக் கொள்ளலாம்.
தொழிற்கல்வி சார்ந்த எந்த படிப்புக்கும் வங்கிக் கடன் பெறமுடியும்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், எந்த படிப்புக்கும் கடன் பெற முடியும்.
உங்களுக்கு அருகிலுள்ள, எந்த தேசியமயமாக்கப்பட்ட எந்த வங்கியையும் அணுகலாம்.
பதினைந்து அல்லது முப்பது நாட்களுக்கு மேல் விண்ணப்பத்தின் மேல் எந்த ஒரு நடவடிக்கையும் வங்கி எடுக்க வில்லையெனில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எந்த காரணத்துக்காக கல்விக்கடன் விண்ணப்பம் நிலுவையில் உள்ளது அல்லது எந்த விதிமுறையின் கீழ் நிராகரிக்கப்பட்டது போன்ற தகவல்களை கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம்.
கல்விக்கடனுக்காகநான்கு லட்சம் ரூபாய் வரை எந்த பிணையம் (சூரிட்டி) கொடுக்கத் தேவையில்லை.
நான்கு லட்சம் முதல் எழரை இலட்சம் ரூபாய் வரை மூன்றாவது நபர் பிணையம் (சூரிட்டி) கொடுத்தால் போதுமானது.
அதற்கு மேல் கடன் வாங்க சொத்து பிணையம் தேவை. கல்விக்கு ஏற்றபடி கடன் பெறலாம்.
படித்து முடித்து ஓர் ஆண்டு அல்லது வேலை கிடைத்து ஆறு மாதங்களுக்குள் முதல் தவணையை செலுத்த ஆரம்பிக்க வேண்டும்.
நன்றாக படித்து, வேலைக்கு போய் வங்கியில் பெற கடனை அடைத்து விடுவோம் என்ற நம்பிக்கை முதலில் வேண்டும். அடைத்து விட வேண்டும் என்ற எண்ணமும் வேண்டும்.
தகவல்:
தீபக்
'வாய்ஸ் ஆஃப் இந்தியன் ' உதவி மையம்.
No comments:
Post a Comment