நீதி மன்றம் உத்திரவிட்டால், மத்திய, மாநில அரசுகளும், அரசுகள் உத்திரவிட்டால், அதிகாரிகளும் பணியாளர்களும் நிறைவேற்றினால் தானே!. நீதி மன்றம் சென்று, ஒருவர் வழக்காடி, உத்தரவுப் பெற்றாலும், உடனடியாக பலன் அடைய முடியாது.
நீதி மன்ற அவமதிப்பு நிலை ஏற்படும்போது வேண்டுமானால், அவருக்குரிய தீர்வு சிறிது தாமதமாக கிடைக்கக் கூடிய வாய்ப்புள்ளது. அந்த உத்தரவை ஒட்டி, அதற்கிணையான நிலையுடைய வேறொருவர், தனக்குரிய தீர்வை பெற்று பலனடைய முடியாத நிலையே உள்ளது என்பதை மறுக்கவியலாது.
பலரும் தமக்குரிய தீர்வை, நீதிமன்றத்தை அணுகிப் பெறமுடியாத நிலையிலே காலம் முடிந்து விடுகிறது.
" திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சுதா, அகரம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சமையலராக பணியாற்றி வந்த அவரது தாய் இறந்து விட, "வாரிசு உரிமை " அரசாங்க ஆணைப்படி, தனக்கு சத்துணவு அமைப்பாளர் பணி வேண்டி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க, சமூகநலத்துறையோ , சமையலர் அல்லது உதவி சமையலர் பணிதான், அரசு உத்தரவில் உள்ளபடி வழங்க இயலும் என நிராகரிக்க,
சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட,
அரசின் சி - டி பிரிவு ஊழியர்களின் வாரிசுகளுக்கு மட்டும்தான் வாரிசு அடிப்படையில் வேலை அளிக்கப்படுகிறது. பி மற்றும் பிற பிரிவு அலுவலர் குடும்பத்தினருக்கு, வாரிசு அடிப்படையில் வேலை அளிப்பதில்லை.
சி - டி பிரிவு ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை அளிக்கும்போது, அவர்களின் தகுதிக்கேற்ப வேலை அளிக்கலாம். 'இறந்தவர் பார்த்த வேலையின் தகுதிக்கு ஏற்பத்தான் வேலை அளிக்க முடியுமென கூறமுடியாது' என்றும் உத்தரவிட்டதுடன்,
சுதாவின் தகுதிக்கேற்ப சத்துணவு அமைப்பாளர் வேலை வழங்கலாம். அமைப்பாளர் பணிஇடம் எங்கு காலியாக உள்ளதோ, அங்கு அவரை 8 வாரங்களுக்குள் பணி அமர்த்தும் நடவடிக்கையை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
சந்தேகம் நிவர்த்தி செய்க நட்புகளே:-
பார்வை குறைந்த ஒருமாற்றுத்திறினாளியின் தந்தை, போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணி புரியும் காலத்திலேயே இறந்து விட, தாயுக்கும், அவருக்கு பின் இவருக்கு 21 வயது வரையும், ஓய்வூதியம் வழங்கி விட்டு, மேஜர் ஆகிவிட்டதால் ஓய்வூதியம் வழங்க முடியாது என நிறுத்தியதுடன், வாரிசு அடிப்படையிலும் பணியை பின் 9 ஆண்டுகளாக கொடுக்காமல் புறக்கணித்து வருகிறார்கள். விண்ணப்பித்தால், வாரிசு பணியிட வாய்ப்பு காத்திருப்போர் பட்டியலில் தான் உள்ளாய் என்று போக்கு காட்டி வருகிறார்களாம். இவருக்குப்பின் பதித்த சிலருக்கு பணி கிடைத்து விட்டதாம். எத்தனை நபர்களுக்கு பின் தான் உள்ளதை அறிய முடியாத நிலையில், 30 வயதைக் கடந்தும் பணி கிடைக்காமையால் திருமணமும் செய்துக் கொள்ளாமல் வாழ்வை கழிந்துக் கொண்டிருக்கிறார் தனிமையில், வருமானமில்லா ஊனமுற்றவராக.
**இவருடைய நிலைக்கு தீர்வு எப்படி காண்பது என தெரிந்தவர்கள் கருத்திடும்படி கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment