கணவன் குடிப்பான், மனைவி கண்டிப்பாள். கோவத்தினால் கணவன், மனைவியை அடிப்பான், கொலை செய்வான் என கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால், இங்கு கதையே வேறு. கோவையில் இளம் மனைவி 26 வயது. 6 மற்றும் 4 வயதில் இரண்டு குழந்தைகள். கணவன் ரயில்நிலையத்தில் டீ விற்பனையாளர். மது பழக்கத்துக்கு அடிமையாய் ஆனா மனைவிக்கு, பலமுறை அறிவுரை கூறினார் கணவர். சில மாதங்களுக்கு முன்பே தற்கொலைக்கு முயன்றவரை, அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் காப்பாற்றினர். மீண்டும் மது குடிக்க ஆரம்பிக்க, மது குடிக்கும் பெண்களுடன் தொடர்பு வேண்டாமென கணவன் கண்டிக்க, மீண்டும் தற்கொலை செய்துக் கொண்டார்.
இதிலிருந்து பெண்களும் மது அருந்துவது பரவியுள்ளது தெரிகிறது. வாழ்க தமிழக குடிமக்கள். முதலில் ஆண்கள் மட்டும் குடித்ததால் குடிமகன்கள். பெண்களும் இணைந்திருப்பதால் குடி மக்கள். இது எப்படியிருக்கு?
No comments:
Post a Comment