ஓடிஸா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தை , கடந்த மாதம் 'ஃபைலின்' புயல் தாக்கிய போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெருமளவு உயிர் சேதம் தடுக்கப்பட்டது.
\பாதிக்கப்பட்டவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவிகள் வழங்கி வருகிறது. இந்நிலையில், தங்களுக்கும், புயல் நிவாரண நிதி வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி, ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அங்குள்ள மாற்றுத்திறனாளிகள் சங்க செயலாளர் ராஜேந்திரகுமார் பிசோய் கூறுகையில்,"இயற்கை பேரிடர்களால், இம்மாவட்டத்தி 2000க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பான்மையானவர்களிடம் குடும்ப அட்டை இல்லாததால் நிவாரண உதவிகள் பெறமுடியவில்லை.' என்றார்.
இதற்கிடையே, மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க, வட்டார வளர்ச்சி அலுவலகர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
# எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தான் கவனிப்பார்களோ?
# இதுதான் அழுத்த பிள்ளை பால் குடிக்கும் என்பதோ?
No comments:
Post a Comment