தமிழகத்தில் வருடத்திற்கு 2700 குழந்தகள் பிறக்கும் போதே பாத வளைவுடன் பிறக்கின்றன. இதற்கு ஆப்ரேசன் இல்லாமலே, மாவுகட்டு மூலம் குணப்படுத்த, 'கியூர் இண்டர்நேஷனல் இந்தியா' என்ற நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இச்சிகிச்சை முதன்முதலாக, சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் மூன்று ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. பின் சென்னை ராயபேட்டை அரசு மருத்துவமனை, கோவை, தர்மபுரி, மதுரை, தஞ்சாவூர், மற்றும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என மொத்தம் 7 (ஏழு) இடங்களில் பாத வளைவு சீரமைப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒரு வயதுக்குள் இந்த சிகிச்சை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இது வரை 1600 குழந்தைகளின் பாத வளைவுகள் சரி செய்யப்பட்டுள்ளது. இதற்கான நன்றி தெரிவிக்கும் விழா சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று நவம்பர் 7ம் தேதி நடந்த போது, அதில் உரையாற்றிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நெல்லை, திருவண்ணாமலை, நாகர்கோவில் மருத்துவக் கல்லூரிகளிலும் இந்த ஆண்டுக்குள் குழந்தைகளுக்கான பாத வளைவு சீரமைப்பு இலவச சிகிச்சை.விரிவுபடுத்தப்படும் என்றார்.
குழந்தைகளுக்கான பாத வளைவு சீரமைப்பு இலவச சிகிச்சை.வாய்ப்பை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொண்டு, குழந்தைகளின் நலம் பேண கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment