அவர்களாகவே கேட்டை திறந்துக் கொண்டு வந்தனர் இருவர் கேட் திறந்து வரும் சத்தம்
கேட்டு, யாரோ உறவினர்கள் வருகிறார்கள் போலிருக்கிறது, அவர்கள் தானே முன்னறிவுப்பு
கொடுக்காமல் உள்நுழையக்க கூடியவர்களாக இருப்பார்களென நினைத்தப்படி,
சோர்வினால் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டிருந்த எமது மனைவியை எழுப்பியபடி, வீட்டுக்
கதவைத் திறந்தால், பிராமணர் உடுத்தும் அமைப்பில் பளீர் வெள்ளை நிறத்தில் கரை
போட்ட வேட்டியை கட்டி, மேல் வெற்றுடம்பில் அங்கவஸ்திரம் குறுக்கில் சுற்றி போட்டபடி,
மத்திய தர வயதையுடைய இருவர், ஏதோ ஓமம் செய்ய வேண்டும் கூறி, இந்த ஒரு
ரசிதுகளோ, நோட்டோ இல்லாமல் வசூலுக்கு வந்திருந்தார்கள்.
நினைவுகள் பின்னோக்கி ஓடியது. சில மாதங்களுக்கு முன்பும், இதே போல பட்டு வேட்டி, பட்டு
அங்கவஸ்திரம் அணிந்தபடி வயதில் மூத்தவர்கள் இவர்கள் வந்திருந்தனர். அவர்களும்
முன்னறிவுப்புக் கொடுக்காமல் கேட் திறந்து கொண்டு வந்தார்கள். கம்பிரத் தோற்றத்துடன்
வயதிலும் முதிர்ந்தவர்களாய் இருந்ததால், அவர்களை அமர வைத்து, வந்த விஷயத்தை
விசாரித்தோம், அவர்கள் ஏதோ யாகமோ, மோகமோ செய்யப்போவதாக கூறி, நன்கொடை
கேட்டார்கள். யானும் ரூபாய் 50/= கொடுத்தோம். அவர்கள் 50/=ரூபாயில் யாகம் செய்ய
முடியுமா என கூறியதும், என்னடா வம்புயிது என எண்ணியபடியே மேலும் 50/= ரூ கொடுத்தோம்.
அடுத்து அவர்கள் கூறிய வார்த்தைதான் எம்மை மிகவும் யோசிக்க வைத்தது. நாங்கள் இருவர்
வந்திருக்கிறோம், இந்த 100/= ரூபாய் போதுமா? கடவுள் அடையாளம் சொன்னதால்தான்
உங்களிடம் வந்தோமென கூறினார்கள். பெரியவர்களே எம்முடைய சக்திக்கு
கொடுத்திருக்கிறேன், கடவுளுக்கும் எமைப் பற்றி தெரியுமென கூறி, வெளியே அனுப்பி
வைத்தோம். உடனடியாக எதிர் வீடு, அடுத்த வீடு என போய் கொண்டிருந்தார்கள், வசூல் செய்தபடி.
ஓரிரு மாதங்களுக்கு பின், இதேபோல வேறொரு ஜோடி, வேறொரு இடத்தில் வசூல் செய்துக்
கொண்டிருந்தது. இன்று இவர்கள். இவர்களைக் கண்டதும், பழைய நினைவுகள் வர, எம்மால்
எதுவும் தர முடியாது. எத்தனை ஜோடிகள் இதுபோல் கிளம்பியிருக்கிறீர்கள் என
கூறியதும், தாமதமே செய்யாமல், உடனடியாக இடத்தைக் காலி செய்து விட்டு சென்றனர்.
இவர்களைப் பார்க்கும் போது, பிராமணர் வேசமிட்து, வீடுகளை நோட்டமிடுபவர்களைப்
போலவேதான் தோன்றியது. என்ன உரிமை, தானாகவே கதவை திறந்துக் கொண்டு உள்ளே
வருகிறார்கள். சந்தேகத்தின் பேரில் யாரிடம் புகர் கொடுப்பது? எங்கள் வீட்டிற்கு, இருவர்
இருவராக, இரு முறை வந்தவர்கள் நன்கு பேர், செல்லும் வழியில் கண்டவர்கள் இருவர், ஆக 6
பேரில் ஒருவர் கூட நோஞ்சானாக இல்லை. திடகார்த்தமாகவும், கட்டுமஸ்தான உடலை
உடையவர்களாகவே இருந்தனர் என்பது குறிப்பிட வேண்டிய முக்கிய
செய்தியாகும். சாதாரணமாக பிச்சைக்காரர்கள் வந்தால் 1 ரூபாய், 2 ரூபாய் போடுவோம்,
இல்லாவிட்டால் போய் வா என விரட்டி விடுவோம். இவர்களோ பட்டுடுத்தி ஏமாற்றி, ஏச்சி
பிழைக்கும் கௌரவ பிச்சைக்காரர்களாக இருக்கிரார்கள்.
நண்பர்களே! உங்கள் இல்லங்களுக்கும், இப்படி யாராவது, வசூல் என்ற பெயரிலும், வேறு
முறையிலும் வரலாம். வீட்டில் உள்ளவர்களுக்கும், பெண்களுக்கும் முன்னெச்சரிக்கையாக
சொல்லி வைக்கவும். இதற்கு முன் இதுபோல் வந்தவர்களைப் பற்றி, யாம், எமது
மனைவியிடம் கூறாததால், வந்த பிராமணர்களுக்கு நம்மால் முடிந்ததை கொடுத்து
அனுப்பியிருக்கலாம் என்ற வருத்தம், ஆதங்கம் எம் மீது மனைவிக்கு ஏற்பட்டது. விவரம்
கூறியதும் புரிந்துக் கொண்டார்.
No comments:
Post a Comment