Translate

Saturday, November 30, 2013

அசத்தலான கண்டுபிடிப்புகள்.



' ஐ 3 எக்ஸ்போ ' என்ற மூன்று நாள் கண்காட்சி, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், சென்ற சென்ற செப்டம்பர் 27ம் தேதி துவங்கி நடந்து முடிந்து விட்டது. கோவை பி.எஸ்.ஜி., "முன்னாள் மாணவர்கள்" சார்பில், இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஊக்குவிப்பு தளம் அமைக்கும் வகையில் நடைப்பெற்றது. நாடு முழுவதிலிருந்தும் வந்திருந்த 550 கண்டுபிடிப்பாளர்களின் 750 புதிய கண்டுபிடிப்புகள் இடம் பெற்றிருந்தன.

இளம் தலைமுறையினர், புதிய சிந்தனையுடன், பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை கையாண்டாலும், அடையாளம் காட்டப்படாமல் உள்ளனர். அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு ஒரு தளம் கிடைத்தால், நாட்டு மக்களுக்கு நவீன கண்டுபிடிப்புகள் கிடைக்கும். அதனால் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, இந்த கண்காட்சி தொடக்கமாகும். 

   இதில் வேளாண்துறை, சூரிய ஆற்றல், இஞ்சினியரிங் துறை, உணவு பதப்படுத்துதல், ஜவுளித் துறை, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், அத்துடன் பல்வேறு துறைகள் சார்ந்த அசத்தலான கண்டுபிடிப்புகள் இடம் பெற்றிருந்தன.  அதில் வைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர மிதி வண்டிக்கு, சூரிய மின்சாரத்தில் இயங்கும் படியாக அமைந்திருந்த கண்டு பிடிப்பு. மாற்றுத் திறனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகும்.

பெட்ரோலால் இயங்கும் ஸ்கூட்டர்களை அரசு உத்தரவு படி, இலவசமாக  பெற தகுதியில்லா, ஆனால்  கையால் பெடல் சுற்றி இயக்கும் மூன்று சக்கர இலவச சைக்கிளைப் பெற தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, சிரமத்தைக் குறைக்கும் வகையில், சூரிய சக்தியில் இயங்கும் முறையில் மாற்றியமைத்து வழங்கினால், பேருதவியாக இருக்கும்.

தமிழக முதலமைச்சர் அவர்கள், இதை சிந்தனையில் இருத்தி, சூரிய சக்தியால் இயங்கும் வகையில் மூன்று சக்கர சைக்கிள்களை மாற்றி,  மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க உத்தரவு இட வேண்டுமாய் தமிழகத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். 

No comments: