Translate

Friday, December 8, 2017



பொற்குவியலாய் வாழும் உமது அன்பு துணைவியாருக்கு
எமது இனிய பிறந்தநாள்வாழ்த்துகள் ஐயா.

கலையழகு காவியமிது,
சொல்லழகு ஓவியமிது
சுவையழகு வாழ்வுமது
நீங்காத அன்புமது
பருவத்தின் பாசமது
பழமாயினும் மாறாதது
இரண்டற கலந்ததது
இறையருளால் நிலைக்குமது
தோளோடு தோள் கொடுத்து
தோள் சாய இடங்கொடுத்து
இன்ப துன்பங்கள் தான் சுமந்து
இன்று வரை பரப்பரப்பாய்
இயங்குமும் தலைவியவர்
இனியுமவர் நலமுடனே
இன்னலின்றி வாழ்ந்திடவே
அவர் தளரா மனவுறுதியுடன் நடைப்போட
ஆண்டவரோ அருளள்ளி தான் வழங்க
பாதந்தனில் பணிந்து நான் பிரார்த்தித்தேன்.
ஆசிகளை சேர்ந்து நீங்களெனக்கு வழங்கிட,
அவர்கெமது பிறந்தநாள் வணக்கங்களுடன் வாழ்த்துகள் ஐயா.

என்றும்,
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்

#மேலே காணும் வாழ்த்து எமது முகநூல் மூத்த நண்பரும் பல நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தும் தன்னம்பிக்கையாளரும் கவிஞர் திரு.இரா. கி @ இராஜேந்திரன் கிருஷ்ணசாமி அவர்களின் துணைவியார் 
திருமிகு #விஜயலக்ஷ்மி_இராஜேந்திரன் அவர்களின் பிறந்தநாளுக்கான எமது வாழ்த்து. 




No comments: