Translate

Friday, December 8, 2017

கேள்வி பதில் – இன்றொரு தகவல்

கேள்வி:- எனது மாற்றுத்திறனாளர் தேசிய அடையாள அட்டை தொலைந்து விட்டது \ சேதமாகி விட்டது. அதற்கு பதிலாக புதிய அட்டை எங்கே, எப்படி பெறுவது?
பதில்:- ஒவ்வொரு வாரமும் மாவட்ட மாற்றுத்திறனாளர் நல அலுவலகத்தில், மருத்துவர் சான்று அளிப்பார்கள். அந்த நாளில் உங்கள்

1)   பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் மூன்று,
2)   இருப்பிட சான்றுக்கான ரேசன் கார்டு,
3)   ஆதார் கார்டு, அசலுடன் நகல்கள்,
4)   இதற்கு முன் பெற்ற மாற்றுத்திறனாளர் தேசிய அடையாள அட்டையின் நகல் எடுத்து சென்று,
5)   மாவட்ட மாற்றுத்திறனாளர் நல அலுவலருக்கு விண்ணப்பம் அளித்து, புது மாற்றுத்திறனாளர் தேசிய அடையாள அட்டையைப் பெறலாம்.
என்றும் உங்கள்,
மாற்றுத்திறனாளர் நண்பன்,

A.M.பத்ரி நாராயணன்

No comments: