Translate

Friday, December 15, 2017

பார்த்ததும்



எத்தனை தம்பிகளை
நீ கவிழ்ப்பாய்
உன் சூட்டிகையாலே?

பார்த்ததும் கவி தோன்றும்
பாவை உன் நிழல் பார்த்தும்.
பார்க்காமல் நீ சென்றாலும்
பார்வையகற்ற அவர் மனம் துடிக்கும்.
பல் வரிசை எதிரொளிக்க
பால் மல்லி சுண்டியிழுக்க
பட்டுடை சேலையில்
பரபரக்கும் உன் விழிகள்
படப்படத்து தம்பிகளிதயம் துடிதுடிக்கும்
பரப்பி வைக்க எத்தனையோ
பட்டியல் இருந்தாலும்
பாவப்பட்ட தம்பிகளுக்கு இடங்கொடுத்து
பக்குவமாய் ஒதுங்குகிறேன் இத்துடனே.
ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M. பத்ரி நாராயணன் பவஆக்கம்:- த✍️


மேலே காணும் படத்திற்கு வலை நண்பர்களின் கீழே உள்ள படைப்புகளுக்காய் எனது பதிலுரையாய், நான் எழுதியது மேலே.

பூமி தொடாத விழுதுகளில்
ஊஞ்சலாடுகிறது
அவள் கூந்தலில்
மல்லிகை

மேல் ஆடை நீந்தும் பால் ஆடை மேனி
மேல் ஆடை நீந்தும் பால் ஆடை மேனி
நீராட ஓடிவா நீராட ஓடிவா
வேல் ஆடும் பார்வை தாளாத போது
வேல் ஆடும் பார்வை தாளாத போது
நோகாமல் ஆடவா நோகாமல் ஆடவா

உன் கூந்தல் உச்சியில்
வாசம் கொண்டதால்
மட்டுமே....
மோட்சம் பெற்றன மல்லிகைப்பூக்களும்,
எனைப் போலவே!!!

உன் கூந்தல் உச்சியில்
வாசம் கொண்டதால்
மட்டுமே....
மோட்சம் பெற்றன மல்லிகைப்பூக்களும்,
எனைப் போலவே!!!

நாவினால் மட்டுமல்ல..
நாசியினாலும் சுவைக்கத்தூண்டும் வாசனைக்காரி நீ..


கருங்கூந்தல் மல்லிகையே
கண்டனப்போர் காணப்போகிறாய்
கன்னத்திலும் கழுத்திலுமான
என் இடத்தை நீ நிரப்பி
எனை பணி நீக்கம் செய்ததனால்
இப்படிக்கு,
விரல்கள்.....

உன்னை பார்த்ததில் இருந்து
#இதய_துடிப்பு அதிகமாகிவிட்டது அப்போது தெரியவில்லை





செம்பருத்திக்கு மல்லி சூடி
செண்பகவள்ளி சிரிக்கிறாள்/
பருத்தியிலே சேலை நெய்து
பல்லாக்குப்போல் ஜொலிக்கிறாள்/
காதோரம் கம்மலிலே
காமத்தையும் ஒளிக்கிறாள்/
சந்தண முகத்திலே
குங்குமம் வச்சுவிட
மாமன் நானும் தவிச்சுருக்கேன்
சம்மதம் சொல்லுப்புள்ள
குற்றால குமுதவள்ளி/😢






No comments: