20\12\2017 படகவிதையில் பங்கெடுத்துக் கொண்ட கவிதை.
கனவுகளில் மிதந்தபடி
கண்ணீரும் சிந்தியபடி,
கவலைகளில் மூழ்கிபடி
கவனமோ பணியினில்
பிறப்பைப் பற்றி அறியாத
பிறந்ததற்கு கவலையின்றி
பிணிப்போக்கும் நினைவு மட்டும்
பின்னிலிருந்து அவனைத் தள்ள,
பற்றியெரியும் வயிற்றுக்கு
பசியொன்றே முன்நிற்க,
பணமீட்ட வழியொன்றாய்
பணியிலவனை ஆழ்த்தியது.
குழந்தை தொழிலாளியென
கூப்பாடு போட்டுக்கொண்டு,
குறைக்களைய வழியியம்பா
கூடித்திரியும் கூட்டமொன்று.
எத்தனையோ சோதனைகள்
எடுத்தியம்ப வழியின்றி
எடுத்திருப்பான் சுத்தியலை
எரியும் வயிற்று பசியுடனே.
நாலு காசு சேர்த்தவர்கள்
நல்லதொரு கல்வி கற்க,
நாடி வந்து உதவாதோர்
நக்கலதை பேசித்திரிவார் .
வழி காட்டி, கைக்கொடுக்க
வள்ளலாக தேவையில்லை.
வக்கனையாய் பேசி திரிந்து
வஞ்சிக்காமல் இருந்தால் போதுமது.
பணியிலிருந்து விலக்கி விட்டால்
பசி தீருமோ தன்னாலே.
பகுத்தறிந்து வழி படைப்பீர்
பசியாறி குடும்பமுயர.
ஆக்கம்:-

தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments:
Post a Comment