நில்லென்றால் நின்றும்
செல்லென்றால் செல்லும்
உங்கள் பிள்ளைகளாய்
நாங்கள்
ஏனென்றால்
தந்தைச் சொல்மிக்க மந்திரமில்லை.
உம் கடன் முடிக்க
சுமைகளாய் நாங்கள்
இலட்சியமாய் உழைத்து
வெற்றியுடன் முடித்தீர்
மேடுபள்ளங்களைக் கடந்து
உங்கள் முகத்தில்
நாங்கள் அதிகமாய் கண்டதோ
சந்தோச ரேகைகளை விட
சிந்தனை ரேகைகளே
ஏனென்றால்
சுமைகளாய் நாங்கள்.
உங்கள் அறிவுரைகள் - பலப்பல
ஒவ்வொன்றும்
எங்கள் நினைவில்
தொடர்ந்து வர
மீண்டும்
பகிர்ந்துக கொண்டோம்
உம்மிடையே.
புழங்கும் நாணயம்
இரண்டுப் பக்கம்
தங்கள் நா சிந்தும்
நாணயமோ
நடுநிலையாய்
நிற்குமே என்றும்.
தங்களிடம் என்றுமில்லை
அடித்து பிடுங்கும் நிலை
பெறுவீரே என்றும்
முறையானதை
கொடுத்து விட்டே.
ஆசை அதிகம் கொண்டதில்லை
மோசம் போய் விடுமென்று
ஆனாலும் போய் விட்டது
மோசக்காரர்களிடம் சிக்கி.
காலங்கள் தேய்ந்தாலும்
கடமைகள் இருப்பதாய்
கருதித்தான் தாங்களும்
செயல் படுத்தி வருகின்றீர்
ஓய்வெடுக்க விரும்பாமல்.
ஆசைகள் பல இருக்க
அன்பிலே அது அடங்க
எடுத்துக் கொள்ளும் பழக்கமில்லை
ஆனாலோ
கொடுத்து விடும் பழக்கமுண்டே.
துன்பந்தனை கண்டு
துவண்டுத்தான் விடாமல்
துரத்தும் வாழ்வுதனில்
துரத்தி விட துணையிருந்து
தூண்டி விட்டாள் -உம்
துணையானவள்
இல்லாளாய் இணைந்திருந்து
இல்லம் காக்க
இயன்றதை ஈட்டி வந்து
தாங்களும் கொடுத்து வைக்க
பக்கபலமாய் அவரும் உமக்கிருக்க
சுமை தாங்கியாய் நீரிருந்து
எமக்கோ பகிர்ந்தளித்தீர்
இயன்றதை மனத்தில் கொண்டே.
எமக்கொரு துன்பமெனில்
துளிர்க்கும் உம் விழிநீர்
வெளிச்சம் போடுமே
வெளிக்காட்ட தெரியாத
உமது பாசத்தையும் அன்பையும்.
தங்களின் கண்டிப்பு என்பதோ
கேட்பவருக்கு கசக்கத்தான் செய்யும்
ஆனால் படும்போதோ
அறியச் செய்யுமே
அத்தனையும் இனிமையென்று
கொண்டவளை கடிந்ததை
கண்டதில்லை
தேவையின்றி கோபமும்
கொண்டதில்லை
உம்மிடம் அகங்காரம்
கண்டதில்லை
நீரோ கர்வமும்
கொண்டதில்லை.
பூசி மெழுகத் தெரியாது
புரட்டிப் போடவும் தெரியாது
வேண்டும் என்றும் உங்களுக்கு
வெள்ளை அறிக்கை மட்டுமே.
சுமையாய் கருத மாட்டோம்
சுமைகளாய் எங்களை
சுமந்த உங்களை.
சுகமாய் வைத்திருக்க
சுமப்போமே வலிகளையும்
சுகமென நினைத்துத்தான.
தாங்கள் வாழ வேண்டும்
நீண்ட வாழ்வுடனும்
நிலையான நலனுடனும்
இறையருள் துணைக்கொண்டு.
- முகநூலில் (Face Book in My Notes) அன்புள்ளங்களின் கருத்துக்கள்:-
- Keyem Dharmalingam அருமையான தலைப்பு,
அருமையான கருத்து,
//சந்தோச ரேகைகளை விட சிந்தனை ரேகைகளே//
மனதிலாடுகின்றது நன்றி "தவப் புதல்வனே" பத்ரி நாராயணன் அவர்களே!!!Wednesday at 1:30pm · · 2 people - Jaya Nallapan.
//சுமையாய் கருத மாட்டோம்
சுமைகளாய் எங்களை
சுமந்த உங்களை.
சுகமாய் வைத்திருக்க
சுமப்போமே வலிகளையும்
சுகமென நினைத்துத்தான.//
தந்தைச் சொல்மிக்க மந்திரமில்லை.
அருமை, அழகு தவா சார்.
ஒவ்வொரு வரிகளும் என் தந்தையின் மகத்துவத்தை நினைவு கூறுகிறது!!Wednesday at 2:42pm · · 1 person - Vetha ELangaநீண்ட வாழ்வுடனும்
நிலையான நலனுடனும்
இறையருள் துணைக்கொண்டு.
வாழ வேண்டும்......
god bless him.Yesterday at 12:12am · · 1 person - Nadarajah Kandaih மகனாக பெற்றதன் பயனை பெற்றுவிட்டார்.அருமையான கருத்துக்களை கொண்ட கருத்துக்குவியல்.இதைவிடஒரு
தகப்பன் மகனிடமிருந்துஎதை பெறமுடியும் 16 hours ago · · 1 person - Dhavappudhalvan Badrinarayanan A M @ Nadarajah Kandaih:- மகிழ்ச்சி ஐயாa few seconds ago ·விருப்பம் தெரிவித்த நண்பர்கள்:-
3 comments:
தந்தையர் தினத்திர்க்கு அருமையான கவிதை.மகன் தந்தைக்கியற்றிய கவிதை.
வாழ்க வளமுடன்
//உங்கள் தமிழன் said...
தந்தையர் தினத்திர்க்கு அருமையான கவிதை.மகன் தந்தைக்கியற்றிய கவிதை.\\
நன்றி, உங்கள் வாழ்த்துக்கு.
தொடர்ந்து செப்புங்கள் கருத்துக்களை.
நீண்ட வாழ்வுடனும்
நிலையான நலனுடனும்
இறையருள் துணைக்கொண்டு.
...வாழ வேண்டும்......
god bless him.See More
Post a Comment