சஷ்டியப்த பூர்த்தி வாழ்த்துக்கள்.
ஆண்டுகள் அறுபது கழிந்ததோ நாட்களாக.
அலசி பார்க்கும் நேரமிதோ அமைதியாக.
அனுபவங்கள் எத்தனையோ ஏடுகளில்.
அத்தனையும் வெவ்வேறாய் பதிந்திருக்க,
அவையாயும் கலந்ததே வாழ்வென
ஆழமாய் பதித்தீரே எம் மனங்களிலே.
ஆராதிக்கும் துணையுடனே நன்மக்களும்
அருமையான உரமாய் வலுவூட்ட,
அன்பொழுகும் உன் அணைப்புதனில்
ஆனந்த நினைவுகளாய் - எங்களை
ஆட்டுமே மென்மையாய் ஊஞ்சலிட்டு.
ஆரம்பத்தை எங்கு கண்டோம்
ஆளுகின்ற உம் பாசந்தன்னை - அதை
அளவிட கோளுக்கு, நாங்கள் எங்கு போக.
அருமையான உம் உறவுக்கு
ஆராதிக்க இச்சொல் போதாது
ஆல விழுதாய் குடும்பமது பலமாக
அகண்டு என்றுமது நிலைக்கவே
ஆண்டவனின் கருணையினால்
அருள் பொழியும் நிலையுடனே
ஆகட்டும் மகிழ்வாக நலனுமிணைந்து
தாண்டட்டும் வலுவாக நூறையுமது.
அன்புடனே வாழ்த்தினோம், இந்நாளில்
பாசமான உம் ஆசிகளை பெற்றிடவே.
உங்களின் பாச உறவு,
#கோளுக்கு = அளவுக்கொள்
#அகண்டு = விரிந்து,
#எமது சகோதரி திருமதி.சுபாஷிணி நாராயணன் அவர்களின் வேண்டுகோளின் படி, அவர்களின் நண்பிக்காக எழுதிய சஷ்டியப்த பூர்த்தி (அறுபதாண்டு நிறைவு ) வாழ்த்து மடல்.
1 comment:
அற்புதம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Post a Comment