இனிமேல் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களை குடிகாரர்கள் என்று யாரும் சொல்லக்கூடாது. குடிப்பதற்கு காரணம் இவர்களல்ல. மரபணுக்கள் தான் காரணம்.
மது குடித்தவர்களுக்கு செரிமானம் ஆவதற்காக ''ஆல்கஹால் டிகைடிரோ ஜென்ஸ்" என்னும் வேதிப்பொருள் உருவாகிறது. இந்த பொருளை உருவாக்குவதில், மரபணுக்களே முக்கிய காரணியாக உள்ளது. மரபணுக்கள் இந்த பொருளை அதிக அளவில் உற்பத்தி செய்யும் வகையில் இருந்தால், அவர்களின் மது பழக்கம் சிறிது சிறிதாக அதிகரிக்கிறது. ஒன்றும் அறியாத இந்த அப்பாவி மக்கள், இந்த மரபணுக்களால் எவ்வளவு பாதிக்கபடுகிறார்கள் பாருங்கள். பாவம் இவர்கள். பழி ஒரு இடம். பாவம் ஓரிடமா?
மேலும் மலேரியா,டிப்தீரியா, சின்னம்மை, தொழுநோய் போன்றவைக்கும் மரபணுக்கள் சிறிதளவு காரணமாக இருக்கிறதென ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
சீனா, ஜப்பான், கொரியா போன்ற மங்கோலிய இனத்தவர்கள் வாழும் நாடுகளில், மது பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்கும் வகையில் மரபணுக்கள் உள்ளனவாம். இதுவும் ஆராய்ச்சி தான். இந்த அக்கிரமத்தை யாரிடம் போய் சொல்ல?.
No comments:
Post a Comment