எமது முகநூல் நண்பர் பேராசிரியர்
M Venkatesan Msc Mphil அவர்கள் முகநூளில்
இப்படி பதிவிட,
இப்படிதொடர்ந்தது எமது பதில் கருத்து.
இப்படியே தொடருமா உங்கள் எண்ணக் கருத்துகளும்.
இரவு எட்டே முக்கால்
இனியும்
இரண்டு எடுத்து வைத்தால்
இனிய
இருப்பிடம் வரும்
இனிக்கும்
இனிய மாலை
இரவு வணக்கம்
இனியோரே .
இன்றைய பொழுதில்
இதமான நிலையில்
இனிதானதாய்
இயம்பினீரே
இன்புற்றிருக்க.
இனியும் வருக
இன்பம் தருக
இயம்புவீரோ
இடைவெளியின்றி.
இல்லாளும்
இன்னிசை பாடி
இசைவாய்
இடுவாரே
இவரின்
இச்சையறிந்து.
இச்செய்கை
இவ்வையகமிதில்
இழையோடும்
இகழா நிலையோடு.
No comments:
Post a Comment