Translate

Wednesday, October 16, 2013

உலக உணவு தினம்

 

இன்று (16/10/2013 ) உலக உணவு தினம். ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமில்லாமல் உணவு தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது மனித உரிமையாக கருதப்படுகிறது. உலகிலுள்ள அனைவருக்கும் உணவு அவசியம். இல்லாவிடின் அழிந்து விடும் உலகு.

வசதி வாய்ப்பற்றவர்கள் , ஊனமுற்றவர்கள் மற்றும் இயற்கை சீரழிவுகளால் பாதிக்கபடவர்களுக்கும் உணவு வழங்க வேண்டியது அரசின் கடமை என்கிறது ஐ.நா.சபை. இதை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.ஆதலால் இன்றைய அக்டோபர் மாதம் 16ம் தேதியை " உலக உணவு தினம் " கடைப்பிடிக்கப் படுகிறது.

இன்றைய நிலையில் உலகளவில் சுமார் 87 கோடி பேர் பசியாலும் ஊட்டசத்துக் குறைவினாலும் துன்பப்பட்டு வருகின்றனர்.இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் இந்தியாவையும் சேர்த்து வளரும் நாடுகளில் வசிக்கின்றனர்.

உலகில் வாழும் அனைவருக்கும் தேவையான உணவு இருப்பினும், அதை விலைகொடுத்து வாங்கும் அளவுக்கு மக்களிடம் வார உமானம் இல்லாததும்
பசியால் ஏற்படும் காரணமாகும். உணவு தானியங்கள், தயாரிப்பதற்கான பொருட்கள், காய்கறிகள் , பழ ங்கள், கீரைகள் போன்றவற்றை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளில் தீவிரம் இல்லாதால், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் நிலவும் விலைவாசி உயர்வு ம்,உணவு பாதுகாப்புக்கு பெருத்த அச்சுறுத்தலாகும்.

உலக வங்கி அறிக்கைப்படி 2010 - 2011ம் ஆண்டில் மட்டும் உணவு பொருட்களின் விலையேற்றத்தால் உலகம் முழுவதும் மேலும் 7 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என தெரிவிக்கிறது. உணவு பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது ஒரு புறம் இருப்பினும், உணவு பொருட்களை பாதுகாப்பதும், உணவு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியமாகும்.

உணவு பொருட்களை பாதுகாப்பீர்..
உணவை வீணாக்காதீர்கள்
இன்று மட்டுமல்ல இனி வரும் காலத்திலும்
முடிந்தவரை இயலாதவர்களுக்கு மனமுவந்து உணவிட்டு காப்பாற்றுங்கள்.
 


No comments: