சிக்கனம் என்பது என்ன, என்பதே பலருக்கு புரிவதில்லை. தேவையான பொருட்களை வாங்காமலும், குறைத்து வந்குவதுமே சிக்கனமென சிலர் நினைக்க, செய்யக்கூடிய ஊதாரி செலவில் சிறிது குறைத்தாலே, சிக்கனமெனவும் சிலர் வாதிடுகிறார்கள்.
அதேபோல் ஊழலாலும், லஞ்சத்தினாலும் பல்வேறு சொத்துக்களை சேர்த்து அனுபவித்து வரும் அரசியவாதிகள், சிக்கனம் பற்றி பேசும்போது, வேதனையுடன் சிரிப்பு வருகிறது. சாத்தான் வேதம் ஓதியதுபோல.
சிக்கனம் என்பது என்ன?
அவரவர் வசதிக்கேற்றபடி தேவையான, ஆடம்பரமற்ற பொருட்களை மட்டுமே வாங்குவதுடன், தற்பெருமைக்காக தேவையற்ற செலவுகளை செய்து வீணாக்கும் செயலை செய்யாமலிருப்பதே சிக்கனமாகும்.
நலமாக வாழ்வோம், வளமாக வாழ்வோம், மகிழ்வாக வாழ்வோம் தேவையான செலவுகளை செய்து சிறப்பாக வாழ்வோமென சிக்கன நாளில் வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment