எயிட்ஸ் நோயை கண்டறிய மேற்கொள்ளப்படும் 'கோல்ட் ஸ்டாண்டட்' சோதனை மூலம் முடிவு தெரிந்துக் கொள்ள, இரண்டு வாரங்கள் ஆகும். இதற்கான கட்டணம் அமெரிக்காவில் 200 டாலர்களாகும்.
ஆனால் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பாஸ்டன் நகரில் உள்ள பாஸ்டன் நானோ தொழில்நுட்ப மையத்தின் தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர் அனிதா கோயல் தலைமையில், அந்நிறுவன விஞ்ஞானிகளின் தீவிர ஆராய்ச்சியினால், "ஜீன் ரேடார்" என அழைக்கபடும் புதிய கண்டுபிடித்துள்ளார்.
அதன் மூலம் நானோ தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'நானோ சிப்'பில் சோதனைக்குரியவரின் எச்சில்( உமிழ்நீர்), ரத்தம், இதன் ஏதோ ஒன்றின் துளி வைத்து, புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருவியில் பொருத்தினால், ஒரு மணி நேரத்தில், எயிட்ஸ் பரவியுள்ளதா, இல்லையா? என தெரிந்து விடும். அதனால் ஆரம்ப கட்டத்திலேயே நோய் பாதிப்பை அறிந்து கொண்டு, உரிய சிகிச்சை மூலம் எயிட்ஸ் நோயிலிருந்து முழுமையாக விடுபட முடியும்.
ஒரு முறை சோதனை செய்ய, 2 டாலரிலிருந்து 4டாலர் வரை செலவாகும். அதாவது 100 மடங்கிலிருந்து 50 மடங்குவரை குறையும். அத்துடன் விரைவான முடிவும் கிடைத்து விடுகிறது.
எயிட்ஸுக்கான புதிய நானோ கருவியைக் கண்டு பிடித்துள்ள டாக்டர் அனிதா கோயல் மற்றும் துணைபுரிந்த விஞ்ஞானிகள் அனைவருக்கும் நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் .கொள்வோம்.
No comments:
Post a Comment