மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால், உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு, திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகிறது. இந்த வருடத்திற்கான விண்ணப்பிக்கும் காலம் கடந்து விட்டபடியால், அடுத்த 2014ம் ஆண்டு உயர்கல்வி பயலுபவர்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கு தேவையான விபரங்கள் கீழே.
1) பிளஸ்2 பொது தேர்வில், 1,200 மதிப்பென்களுக்கு 955 மதிப்பென்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.
2) பெற்றோர் ஆண்டு வருமானம் ரூபாய் 6 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3) தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், வேறு கல்வி உதவித்தொகைகள் பெறக்கூடாது.
4) இத்திட்டத்தின் கீழ், தமிழக மாணவர்கள் 4,883 பேருக்கு உதவித்தொகை வழங்கப்படும். இதில் 50 சதவீதம் பெண்களுக்கும், மூன்று சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
5) தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, அவர்களின் வங்கிக்கணக்கில் உதவித்தொகை நேரடியாக செலுத்தப்படும். ஆகவே தேசியமாக்கப்பட்ட ஒரு வங்கியில் சேமிப்புக் கணக்கை துவக்கி, கணக்கு எண்,வங்கியின் பெயர், முகவரி, மாணவ, மாணவியரின் இ-மெயில் முகவரி, ஆதார் எண் (இல்லாதவர்கள், கீழ் காணும் விலாசத்தில் விசாரித்துக் கொள்ளவும்.) தொலைபேசி எண் முதலியவற்றை, தெரிவிக்க வேண்டும்.
6) மாற்றுத்திறனாளியாக இருப்பின், அதற்குரிய படிவத்தை, உரிய மருத்துவ அதிகாரியிடம் பெற்று அனுப்ப வேண்டும்.
7) சான்றொப்பமிட்ட பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நகல், சாதி சான்றிதழ் நகல் இணைத்து அனுப்ப வேண்டும்.
மேற்காணும் அனைத்து தகுதிகளும் பெற்றிருப்பின், அம்மாணவர்கள், கீழ்காணும் இணையதளங்களில் உள்ள விண்ணப்பத்தை, பதிவிறக்கம் ( டவுண்லோடு) செய்து, அப்படிவத்தை பூர்த்தி செய்து, மேற்காணும் சான்றுகளை இணைத்து ,
"இயக்குனர்,
கல்லூரி கல்வி இயக்ககம்,
ஈ.வே.கி.சம்பத் மாளிகை,
9வது தளம்,
சென்னை- 600 006"
என்ற முகவரிக்கு 2014ல் தேர்ச்சி பெரும் பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இணையதள முகவரிகள்:
** தேவையானவர்கள், இத்தகவலை பத்திரபடுத்திக் கொள்ளவும்.
No comments:
Post a Comment