Translate

Thursday, October 3, 2013

மஹாத்மா காந்தி பிறந்தநாள் 2/10/2013





                                      

காந்தி சிறுவனாய் இருந்தபோது, அவருடைய அண்ணன் அடித்துக் கொண்டே இருப்பாராம். அதைப் பொறுக்கமுடியாமல் தாயிடம் புகர் கூறினார். அவர் தாயாரோ, நீயும் அவனை திருப்பி அடிக்க வேண்டியதுதானே என கூறியிருக்கிறார்.

அதற்கு காந்தியோ, அம்மா... நீ, அண்ணனிடம் தம்பியை அடிக்க கூடாது என சொல்லி திருத்துவதை விடுத்து, அண்ணன் தம்பிகள் அடித்துக் கொண்டு பகையாளி ஆக்குகிறாயே என்றார்.

அந்த சிறு வயதிலேயே அகிம்சை எனும் உணர்வு இரத்தத்திலும், எண்ணத்திலும் ஊறியிருக்கிறது.

அதனால் தான் எத்தனையோ கொடுமைகளை அனுபவித்தும், அகிம்சையெனும் மந்திரத்தால், ஆங்கிலேயரிடமிருந்து இந்திய நாட்டை, அவரால் விடுவிக்க முடிந்தது.

மகாத்மா காந்தியடிகள் பிறந்த இந்நன்னாளில் அகிம்சையை உணர்வோம், போதிப்போம்.

No comments: