இன்று (16/10/2013) உலக மயக்கவியல் தினம். மயக்க மருந்து கண்டு பிடிக்காத காலத்தில், அறுவை சிகிச்சை செய்வதென்றால், நோயாளியை சிலர் பிடித்துக் கொள்ள, வலியால் அவர் துடிக்க துடிக்க மருத்துவர் அவசர அவசரமாக அறுவை சிகிச்சை செய்து முடிப்பார்..
இப்பொழுதோ எந்த சிறிய வலியும் இல்லாமல் அறுவை சிகிச்சை நடந்து முடிகிறது. இதற்கு முன்னோடியானவர்,வில்லியம் தாமச் கிரீன் மார்டன். 1846 அக்டோபர் 16ல் அமெரிக்கா பாஸ்டன் நகரில்"ஈதர்" என்னும் வேதிப்பொருளை பயன் படுத்தி, நோயாளிக்குமயக்க நிலை ஏற்படுத்தி முதன்முதலாக வலியில்லா அறுவை சிகிச்சை செய்துக் காட்டினார்.
மயக்கவியல் என்ற வார்த்தை இதற்கு பின்தான் அறிமுகமானது. அறுவை சிகிச்சையை செயல்முறையாக காட்டப்பட்ட இடத்தை 'ஈதர்டோம்' என்ற பெயரில் ஞாபக சின்னமாக பாதுகாத்து வருகிறார்கள். அந்த நிகழ்வை போற்றும் விதமாக அக்டோபர் 16ந் தேதியை உலக மயக்கவியல் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இங்கிலாந்தின் ஜேம்ஸ்யங் சிம்டன் என்ற ஆராய்ச்சியாளர் 1847ல் 'குளோரபாம்' என்ற மயக்க மருந்தை கண்டு பிடித்தார்.அதிக உபயோகத்தில் இருப்பினும் பக்க விளைவுகள் ஏற்பட்டது. கிரிபத் மற்றும் ஜான்சன் என்ற ஆராய்ச்சியாளர்கள் இணைந்து 'குராரின்' என்ற மயக்க மருந்தை 1942ல் அறுவை சிகிச்சை செய்துக் காட்டினர்.
இந்த மாற்றம் அறுவை சிகிச்சை நிபுணர்களின் திறமை அதிகரிக்க வித்திட்டது.
மயக்க நிலை என்பது இயல்பு நிலைக்கும் மரணத்திற்கும் இடைப்பட்டது.
இயற்கைக்கு முறனாக, ஆபத்து நிறைந்ததாக இருப்பினும், தவிற்கயியலா அறுவை சிகிச்சைகளுக்கு தேவைப்படுகிறது. மயக்கவியல் நிபுணர் நோயாளியை மயக்கநிலைக்கு உட்படுத்தி, பாதுகாப்புடன், அறுவை சிகிச்சை முடிந்ததும் இயல்பு நிலைக்கு திருப்புகிறார்.
நோய்கள் தாக்காமல் உடல்நிலையைக் காத்துக் கொள்ளுங்கள்.
தவிற்கயியலா நேரத்தில் அறுவை சிகிச்சைக்காக மயக்க நிலைக்கு உட்பட நேரினும் அச்சப்படாதீர்கள்.
வாழ்த்துக்கள் நலமாய் மகிழ்வாய் வாழ.
1) இதய அறுவை சிகிச்சை,
2) மூளை அறுவை சிகிச்சை,
3) கண் அறுவை சிகிச்சை.
No comments:
Post a Comment