Translate

Friday, October 7, 2016

பூச்சிகாரன் - சிறுகதை


அம்மா தாலாட்டினாள், என் தங்கமே நன்றாக உறங்கி விடு. அம்மா உன்னுடன் நானிருக்கேன். இடையில் நீ
விழிக்காதே. விழித்தாலும் அழுகாதே. பூச்சி உனை பிடித்துக்கொள்ளும் என்று தொடர்ந்து தாலாட்டு பாட, தூக்கம் தழுவிக்கொண்டது. அந்த இரவு விழிப்பு வந்தது. இருட்டில் கைகள் தேட
தாலாட்டிய அம்மா அருகிலில்லை. அழுகை அழுகையாய் வர, ஓ... வென அழ நினைத்து வாய் திறந்தபோது,
நினைவுக்கு வந்தது, அழுதால் பூச்சி பிடித்துக்கொள்ளுமே. கண்களை இறுக மூடிக்கொள்ள, யார் அணைப்பிலோ இருப்பதை உணர்ந்து, ஐயோ அம்மா எனை பூச்சி பிடித்து கொண்டு விட்டதேயென கத்த நினைத்து விழித்தபோது வெளிச்சமாக இருந்தது. அம்மா புன்னகையுடனும் கையில் பாலுடனும் முகம் பார்த்தபடி அணைத்திருக்க, சொல்லி விட நினைத்தேன். ஆனால் பயமாய் இருந்தது, இருட்டில் கண்விழிக்காதே பூச்சி உனை பிடித்துக் கொள்ளும் என மீண்டும் பாடி விடுவாளோ என்று.
ஆக்கம்:
உங்கள்,
தவப்புதல்வன்.
 

No comments: