மனங்களை என்றுமே இணைத்திருப்போம்,
மலரும் எண்ணங்களை பதித்திடுவோம்,
நட்பிற்கோர் இதயமென நமைக் கூற,
சாதனையாய் காலமெல்லாம் வாழ்ந்திடுவோம்.
உறவுக்கு நட்பே முதலிருக்க
எந்நாளும் கலப்பின்றி கலந்திருப்போம்.
முப்பிறவியில் யாராய் நாமிருந்தோம்
இப்பிறவியில் நண்பராய் திகழ்வதற்கு.
எப்பிறவியாயினும் ஏழேழாயிருப்பினும்
இனிதான உறவுடனே இணைந்திருக்க,
சிறப்பான நாளிதிலே பகிர்ந்திடுவோம்
இனிய நண்பர்தின வாழ்த்துக்களை நமக்குள்ளே.
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நட்பூக்களே!!!
No comments:
Post a Comment