Translate

Monday, August 5, 2013

எந்த நேரமும்...



கருக் கொண்ட மேகங்கள்
உருக் கொள்ளும் வேளையிலே,
நினைவுகளின் திவலைகள்
பொழிந்ததே நமை நனைக்க.
காற்றிடை வெளிகளில்
கமழ்கிறது உன் வாசம்.
சுகமளித்த நேரங்கள்
சொக்க வக்கிறது நினைவுகளை.
நீ உச்சரித்த வார்த்தைகள்
நீள்கிறது நதி போல.
உற்சாக குவியல்களாய்
நட்புகளோ குவிந்திருக்க,
நாதங்களாய் நமை மீட்டி,
இசைவெள்ளம்  பரவ செய்து,
இனிதான வாழ்த்துக்களை,
இன்றும் நாம் பகிர்ந்தளிப்போம்.

இனிய நல்நாள் வாழ்த்துக்கள் நட்புகளே !!!

No comments: