Translate

Wednesday, December 4, 2013

நெஞ்சத்தைத் தொடும் கதை.


திடீர்னு விபத்தில் இறந்து போனவரை என்ன பண்ணுவீங்க?
படிச்சுட்டுப் பிடிச்சா பகிருங்கள்.

மகன் : யாரம்மா அது நிக்கலஸ் கிரீன் ..?'

'உன் வயசில் இருந்த அமெரிக்க சிறுவன். விடுமுறைக்காக இத்தாலி போயிருந்த போது, திருடர்கள் அவனை சுட்டு விட்டார்கள்'.

' ஐய்யய்யோ...! அப்புறம் ..?'

' ஆஸ்பத்திரிக்கு போயும் பிரயோஜனம் இல்லை கண்ணு !. 'இனி அவனை காப்பாற்ற முடியாது' என்கிற நிலை வந்ததும், அவனுடைய தந்தை ஒரு முக்கிய முடிவெடுத்தார்.

'என்னம்மா அது..?'

' சொல்கிறேன்...! அடுத்த முறை நிக்கலஸின் குடும்பம் இத்தாலிக்கு போன போது , ஏழு பேருக்கு விருந்து கொடுத்தனர். விருந்து முடிந்ததும், அந்த நபர்கள் நிக்கலஸின் படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் சிந்தினர்.'

'அவர்கள் எல்லாம் யார் அம்மா..?'

'கண்ணே..! அவர்களில் ஆறு பேர், நிக்கலஸின் உடல் பாகங்களை பெற்று உயிர் பிழைத்தவர்கள் '.

கேட்டு கொண்டிருந்த ஆர்த்திக்கு நெஞ்சின் கனம் ஏறியது.

கம்மிய குரலில் கேட்டாள் .

'அந்த ஏழாவது ஆள் யாரம்மா..? '

பதில் உடனே வர வில்லை.

அம்மாவும் துக்கத்தை அடக்கி கொண்டிருந்தது போல் தோன்றியது.

' என் கண்ணே...! அந்த ஏழாவது மனிதனின் அழுது கொண்டிருந்த கண்கள் நிக்கலஸோடது ' திணறி கொண்டே சொன்னாள் அம்மா.

கேட்டு கொண்டிருந்த ஆர்த்தி உடைந்து போய் தேம்ப ஆரம்பித்தாள்.
---------------------------------------------------------------
இப்படியான கதைகள் நிறைந்த புத்தகத்தை சொந்தமாக எழுதி சொந்தச் செலவில் அச்சடித்து வெறும் 100 ரூபாய்க்கு விற்கிறார் திரு.Shanmuganathan Swaminathan சார். (நிஜமா லாப நோக்கோடு விற்றால் தாராளமாக ரூ200/-க்கு விற்கலாம்).

உங்கள் குழந்தையின் அறிவுத் திறனைக் கூட்ட இது போன்ற புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பது நல்லது என்பது அடியேனின் கருத்து.

புத்தகம் வேண்டுபவர்கள் vsshan@rediffmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பதிவு செய்தவர் : ஆனந்தன் அமிர்தன்

No comments: