
பல நிறுவனங்களின் கைப்பேசி எனப்படும் அலைப்பேசிகளின், பெரும்பாலான இணைப்புகள் பாரத் சஞ்சார் என்கின்ற இந்திய தொலைப்பேசி நிறுவனத்தின் டவர்கள் ( அலைக்கற்றை கோபுரங்கள்) மூலமாகத்தான் தங்களுடைய இயக்கங்களை செயல்படுத்தி வருகிறதாம்.
மின்சாரம் தடைப்படும் நேரங்களில் டீசல் ஜெனரேட்டர்களை இயக்கி, டவர்களை செயல்பாட்டில் வைக்க வேண்டியுள்ளதால், கூடுதலாக டீசல், பராமரிப்பு செலவுகள் ஏற்படுவதால், தங்கள் செலவுகளைக் குறைக்கும் பொருட்டு, இந்திய தொலைப்பேசி நிறுவனமும், தனியார் தொலைபேசி நிறுவனங்களும், மின்சாரம் தடைப்படும் நேரங்களில் உடனடியாக டீசல் ஜெனரேட்டர்களை இயக்காமலும், அவ்வப்போது இடையில் நிறுத்தி வைத்து விடுகிறார்களாம். அதனால் தான் அலைப்பேசி உபயோகிப்போருக்கு சரியான சிக்னல் கிடைக்காமலும், அடிக்கடி தொடர்பு துண்டித்து போவதும் நேரிடுகிறதாம்.
இடையில் அழைப்புகள் துண்டிக்கப்படுவதால், தொலைப்பேசி நிறுவனங்களுக்கு நட்டம் ஏற்படுவதில்லை. ஏனெனில் வாடிக்கையாளர் கணக்கிலிருந்து முழு கட்டணம் கழிக்கப்பட்டு விடுகிறது. தொடர்புக் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பவர்கள், நாலைந்து முறை துண்டித்தாலும், சபித்தபடியே பேசி முடிக்கிறார்கள். சிக்னல் கிடைக்காமல் தடைப்படுவதர்கான காரணத்தை மக்கள் அறியாமலும், உணர்ந்துக் கொள்ளாமலும், கேள்வி கேட்காமலும் இருப்பது, நிறுவனங்களுக்கு பெரிய சாதகமாகும்.
எந்த ஒரு நிறுவனமும், தங்கள் வாடிக்கையாளர்கள் விலகுவதைப் பற்றி வருத்தப்படுவதாக தெரியவில்லை. ஏனெனில் மக்கள் அலைப்பேசி இணைப்பு வைத்திருப்பது, ஒரு கௌரவமாகவும், அத்யாவசிய தேவையாக நினைப்பதை உணர்ந்திருப்பதும் ஆகும். மேலும் தங்களை விட்டு வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்திற்கு சென்றாலும், புதிய வாடிக்கையாளர்கள் இணைந்து கொண்டே இருப்பதால், தங்கள் தொழில் நசிந்து விடுமோ என்ற அச்சம் சிறிதும் இல்லா நிலையிலே இருப்பதும் ஆகும்.
காரணமேன்ன?
அலைப்பேசி இணைப்புகளின் ஆரம்பகாலங்களில் தேவையான டவர்கள் இல்லாததால், அலைப்பேசிகளின் உபயோகத்தில் மிக சிரமமும், உபயோபாளர்களும் குறைவாக இருந்தது. தற்போது அப்படியில்லையே?
தற்சமயம் சிக்னல்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதற்கு காரணமென்ன?
இது உண்மையா?
1) டவர்களை இயக்கத் தேவையான மின்சாரம் அரசாங்கத்தால் குறைந்த விலைக்கு வழங்கப்படுகிறதா?
2) செலவுகளை சிக்கனப்படுத்தும் விதமாக ஜெனரேட்டர்களை டீசலில் இயக்குவது குறைக்கப்படுகிறதா?
தீர்வு என்ன?
1) மின்சாரம், டீசல் ஜெனரேட்டருடன், அந்த டவர்களிலேயே காற்றின் மூலமாக இயங்கும் சிறிய காற்றாலை விசிறிகள் அமைப்பது,
2) அல்லது அந்த டவர்களிலேயே சூரிய சக்தி ஒளித்தகடுகள் அமைப்பது மூலமாக அந்த கோப்புரங்களுக்கான (டவர்களுக்கான) மின்சாரம் தடையின்றி பெறுவதுடன், பராமரிப்பு செலவு, டீசலால் ஏற்படும் கூடுதல் செலவும், இறக்குமதியால் ஏற்படும் அந்நிய செலாவணியும் மிச்சப்படும்.
3) மேலும் டீசல் புகையினால் ஏற்படும் மாசு குறைந்து சுற்று சூழலும் சிறப்படையும்.
4) அந்த டவர்களுக்கான சுயதேவைக்கு போக அதிக மின்சாரமிருப்பின் மின்சார வாரியமே பெற்று மக்களுக்கு விநியோகிக்கலாம். மின்சாரத்தட்டுப்பாடும் குறையும்.
அரசும், தொலைத்தொடர்பு நிறுவனங்களும், இதை கருத்தில் கொண்டு சிறந்த திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அளிப்பதுடன், தங்கள் நிறுவனங்களையும் வளப்படுத்திக் கொள்ளுமா?
No comments:
Post a Comment