Translate

Sunday, December 29, 2013

லஞ்சம் ரூ 5000 மட்டும் தானா? ஹி.. ஹி... ஹி....



தமிழகத்தில் 1964ஆம் ஆண்டு, உறவினர்கள் கைவிட்ட, வாழ வழியற்ற முதியோர்களை பாதுகாக்கும் பொருட்டு, முதியோர் ஓய்வூதிய திட்டம் துவக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கும் , உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழும், பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஓய்வூதியம் ரூ 1000மாக உயர்த்தி தரப்பட்டது.  நேரடியாகவும், ஜமாபந்தி, அம்மா திட்ட முகாம்கள் மூலமாக ஓ.ஏ.பி. (old age pensioner ) (முதியோர் ) திட்ட ஓய்வூதிய பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அதனால் கட்சிக்காரர்களும், வருவாய் துறை அலுவலர்களும் ரூ.5000 வரை ( மீதி?) பெற்றுக் கொண்டு, விருப்பத்திற்கு ஏற்றபடி பயனாளிகளை சேர்த்தனர்.

அதனால், ஈரோடு, கன்னியாகுமரி, நாகை,  விருதுநகர், நீலகிரி, பெரம்பலூர், திருவாரூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பயனாளிகள் 130 சதவீதமும், திருநெல்வேலி, திருவாரூர், தூத்துக்குடி,நாகை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களில், உழவர் பாதுகாப்ப ஒய்வூதியத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்கள் பல நூறு சதவீதம் அதிகரித்தது.

 வறுமை கோட்டுக்கு கீழுள்ளோர் பட்டியலை விட ஓய்வூதிய பயனாளிகளின் எண்ணிக்கை உயர்ந்த பிறகுதான் விழிப்பு வந்திருக்கிறது.  மாநிலம் முழுவதும் தணிக்கை செய்ததில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10,000லிருந்து 15 ஆயிரம் பயனாளிகளை நீக்கியுள்ளனர். (பல நூறு சதவீத உயர்வுயென கூறி விட்டு, இந்த கணக்கு எங்கோ இடிக்கிறதே )

ஈரோடு மாவட்டத்தில் சென்ற ஆண்டு இருந்த பயனாளிகள் 40000 பேர். ஆனால் இந்த ஆண்டோ, உயர்ந்தது மட்டும் 1 லட்சத்து 5 ஆயிரம். ஆக 1,45,000. இதில் 25 ஆயிரம் மட்டும் தானா போலி?

அது சரி, 25 ஆயிரம் போலியென கண்டுபிடித்து விட்டு, 10 ஆயிரம் பயனாளிகளை மட்டும்  நீக்கியிருக்கிறார்களாம். மற்ற 15 பேரை நீக்குவதில் என்ன தயக்கம்? இதிலும் எங்கோ குடைகிறதே? அனைத்துக் குற்றங்களுக்கும் சலுகைகள் தானா? பாவம் அப்பாவிகள் மட்டும்.

No comments: