Translate

Sunday, December 1, 2013

சிந்திப்பார்களா இனியேனும்?



இந்தியாவில், பல மாநிலங்களில், மாநிலங்களைப் பிரித்து தனி மாநில கோரிக்கை போராட்டங்கள் வலுத்து  வருவது தெரிந்த தகவலே. அதனால் மாநில வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், பொருட்சேதமும், உயிரிழப்பும் பெருத்த அளவில் இருப்பதை, அந்த போராட்டங்களில் கவனிக்க வேண்டிய முக்கிய  விஷயம். அப்பகுதியின் வளர்ச்சிக்காகவும், வாழ்வாதாரத்தை உயர்த்தவும்,  அம்மாநில அரசுகள் தகுத்த எந்த ஒரு  நடவடிக்கையும்  எடுக்கவில்லை என கூறப்படுவதையும் கவனிக்க வேண்டும். 

அம்மாநிலங்களை பிரிக்க வேண்டும் என கூறும் அரசியல்வாதிகள்,  தங்களின் சுயலாபத்திற்காகவே செய்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

ஆனால் பிரிக்கக் கூடாது என கூறும் அம்மாநில அரசுகளும், ஆளும் மற்றும் வளர்ச்சி அடைந்த பகுதிகளை சேர்ந்த   அரசியல்வாதிகளும், போராட்டம் நடக்கும் வளர்ச்சியற்ற அப்பகுதிகளை, குறிப்பிட்ட காலத்திற்குள் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து முன்னுரிமைகளையும் வழங்குவோம் என உறுதிமொழி வழங்காததற்கு காரணமென்ன?  போராட்டங்களை அடக்குவதால் மட்டும் ஒற்றுமை வந்து விடுமா? இனியேனும் சிந்தித்து செயல்படுவார்களா அரசியல் வியாபாரம் செய்வோர்.

No comments: