Translate

Wednesday, December 18, 2013

அடிமையாகும் இந்தியர்கள்



ஒரு எச்சரிக்கை மணி, இந்திய பொது சுகாதார அறக்கட்டளை (பி.எச்.எப்.ஐ.) யால்  அடிக்கப்பட்டுள்ளது.  

இந்த அமைப்பு நடத்திய ஆய்வில், இந்திய இளம் தலைமுறையினர் 17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகி வருகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 

வளர்ந்த நாடுகளில் மது புகையிலை பழக்கம் குறைந்து வரும் வேளையில், வளரும் நாடுகளான இந்தியா, சீனாவில் மது பழக்கம் இளைஞர்களை   ஆட்டி படைக்கிறது. வார விடுமுறைகள், விஷேசங்கன், திருவிழாக்கள், பண்டிகைகள் என்றால், மது இல்லாமல் விருந்தில்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது. 

இந்தியர்கள் பீர், ஒயின் வகைகளை விட, ஆல்கஹால் அதிகம் கலந்த விஸ்கி, ரம் போன்றவைகளையே அதிகம் விரும்புகின்றனர். "குடி குடியைக் கெடுக்கும், குடலையும் கெடுக்கும்" என மருத்துவர்கள் எச்சரித்தாலும், குடியில் மூழ்கியவர்களால் அதிலிருந்து மீளவே முடியவில்லை.

நாடு முழுவதும், போதையால் ஏற்படும் விபத்துக்கள், பல வகைகளில்  அதிகரித்துக் கொண்டே வருகின்றது சமுக விரோத செயல்கள், வன்முறை சம்பவங்களுக்கும் மதுவே முக்கிய காரணமாக உள்ளது. போதை பழக்கத்தினால் உற்பத்தித் திறனும், வருமான இழப்பும் ஏற்படுகிறது. 



மயக்கும் விளம்பரங்கள்:-
மதுபான நிறுவனங்களின் மாயாஜால விளம்பர தந்திரங்கள்,  விளம்பர கட்டுப்பாடு சட்டங்களிருப்பினும் வலுவற்றதாகவே இருக்கிறது. குடிநீர், சோடா,சி.டி.க்கள், குளிர்பானங்கள் பெயர்களில், பிரபல நடிகர்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் தோன்றி, இளம்  வயதினரை எளிதாக ஈர்கின்றனர்.

சில முக்கிய விருது மற்றும் விழா நிகழ்ச்சிகள், விளையாட்டுக்களுக்கும் நிதி உதவி அளித்து விளம்பரம் தேடிக்கொள்கின்றன. இப்போது வெளியிடப்படும் பெரும்பாலான திரைப்படங்களில் பாடல்களில், வசனங்களில், மதுபான வகைகளின் பெயர்களை சர்வ சாதாரணமாக பயன்படுத்தி விளம்பரம் தேடிக் கொள்கின்றன. 

சமிப காலமாக பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமுக வலைதளங்களிலும் மதுபான விளம்பரங்கள் விதைக்கப்படுகிறது. இப்போதுள்ள நிலை நீடித்து, போதைப்பழக்கத்தை   தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், சட்டங்களை கடுமையாக்க தவறினால், நாட்டின் மனித வளமுடன்  நாட்டின் பொருளாதார நிலையும், சட்ட ஒழுங்கு நிலையும்  மிக மோசமாக பாதிக்கப்படும். 

# ஆசாபாசங்களை துறந்தவர்களாக விளங்க வேண்டிய மத போதகர்களே (ஆன்மீகவாதிகளே ) நிலை தடுமாறிக் கொண்டிருக்கின்ற, இந்நிலையில் மதுபான வகைகளை வகை வகையையும், வர்ணஜால விளம்பரங்களையும் காட்டி, எங்கும் சகஜமாக அனைத்து இடங்களிலும், நேரங்களிலும், வயது வித்தியாசமில்லாமல், அனைவருக்கும் விற்கக்கூடிய நிலையை வைத்துக் கொண்டு, சாதாரண குடிமகனை " குடி குடியைக் கெடுக்கும், குடலையும் கெடுக்கும்" என்னும் சாதாரண விளம்பரம் மட்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தி விடுமா? 

No comments: