
பூமிக்கடியில் இருந்த கனிமங்களை, ஏறக்குறைய வெட்டியெடுத்து விட்டார்கள், சுரங்கங்களைத் தோண்டி. இனி கிடைக்காது என்ற நிலையில் தேட வேண்டியது கடலுக்கடியிலும், விண்வெளி கற்களிலும்.
விண்வெளி ஆராய்ச்சிகளின் மூலம் 'ஆஸ்டிராய்டு ' என்ற விண்வெளி கற்களில் கனிமங்கள் இருப்பதை விஞ்ஞானிகள், ஆராய்ச்சிகள் மூலம் கண்டுப் பிடித்துள்ளனர். நிலத்துக்கடியில் உள்ளது போலவே, நீர், பிளாட்டினம், வெள்ளி ஆகியவை இருப்பது தெரிய வந்துள்ளது.
விண்வெளி கற்களை மோத வைப்பதின் மூலம் கனிமங்களை வெளிக் கொணரலாம். இதன் மூலம் , மேலும் பல ஊகங்களுக்கு விடையறிய முடியுமென கருதுகிறார்கள்.
# நாட்டின் எல்லைகளுக்கு பிரச்சனை இருப்பது போல், விண்கற்களுக்கும் உரிமை பிரச்சனை ஆரம்பமாகிவிடும்.
No comments:
Post a Comment