Translate

Thursday, December 5, 2013

அஞ்சலி செய்தி

 அஞ்சலி...





அனைவராலும் அன்புடன் தாத்தா என்றழைக்கப்படும் மிக வயது முதிந்த பெரியவர்,  சென்ற நவம்பர் 15ம் தேதி இறைவனடி சேர்ந்து விட்டார். அவர் உயிர் பிரியும் வரை பொரி கடலை  விற்பனைக் கடையும், தனைத் தேடி வருகிறவர்களுக்கு ஜாதகமும் பார்த்து வந்தார். சொன்னால் நம்ப மாட்டீர்கள், கோழியிலிருந்து முட்டையா? முட்டையிலிருந்து கோழியா? என்பது போல, அவர் கிழே விழுந்ததால் உயிர் பிரிந்ததா? உயிர் பிரிந்ததால் கிழே விழுந்தாரா? உடனடி மரணம்.
நம்மால் அந்த வயதில் நகரக்கூட முடியுமா என்பது சந்தேகமே.  வருத்தமான சூழ்நிலையாக இருப்பினும், இந்த நேரத்தில் அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். பொதுவாக பல இடங்களில் ஒரு ஜாதகம் கொடுத்து திருமண பொருத்தம் பார்த்தால், ரூ.100லிருந்து 500ம் அதற்கு மேலும்  வாங்குகின்ற இந்த நிலையில், 10 ஜாதகங்கள் கொண்டு சென்றால் கூட, பொறுமையாக பார்த்து சொல்வதுடன், நாம் கொடுப்பதை வங்கிக் கொள்வார். அதுவும் ரூ.50, ரூ100 மட்டுமே. ஒரு ஜாதகம் கூட பொருந்தாவிடின் ரூபாய் பெற்றுக் கொள்ள மறுப்பார். நாமே வற்புறுத்தி வலிய கொடுக்க வேண்டும். அவர் சொல்லும் காரணம், வித்தியாசமானதாய், எனது மகன் மகளுக்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது போல் கருதிதான் பார்க்கிறேன்.  ஒரு ஜாதகம் கூட பொருந்தா நிலையில், கட்டணம் பெற்றுக் கொள்வது எனக்கு ஏற்புடையது அல்ல என்பார்.  அப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த அப்பெரியவர், யாருக்கும் சிரமம் கொடுக்காமல் இயற்கை எய்தி, இறைவனடி சேர்ந்து விட்டார்.

நிச்சியமாக நம்புகிறோம், அவர் அத்மா இறைவனின் நிழலில் அமைதியாய் இளைப்பாறும். அவருக்காக இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறோம். ஓம் சாந்தி. ஓம் சாந்தி... ஓம் சாந்தி....  

No comments: