எம்முடைய பிறந்த நாள், திருமண நாள் போன்றவற்றை அன்றைய நாட்களில் மறந்து விடுவதைப்போல, இந்த நாளும் நினைவுக்கு வருவதில்லை.
ஆம், வேதனைகளிலும், சோதனைகளிலும் மிதந்து, அதையும் தாண்டி, சாதனை புரிந்துக் கொண்டிருக்கின்ற, புரிய துடித்துக் கொண்டிருக்கின்ற, உடன்பிறவா மாற்றுத்திறனாள தோழர் தோழியருக்க்கான நாள், இன்றையநாள் "உலக மாற்றுத்திறனாளர் நாள்"
இன்றைய நாளில் உங்களில் ஒருவனான யாம் உரைக்கும் ஒரே செய்தி.
உயர்வு தாழ்வுகள் கருதாமல்,
ஜாதி மத வேறுபாடுகள் பார்க்காமல்,
ஒன்றுபட்டு செயல்படுவோம்,
உயவுகள் அடைந்திட உதவிடுவோம் என்ற உறுதிக் கொள்வோம்.
அன்புள்ளங்களே! 'உலக ஊனமுற்றோர் தினத்தில்' உங்களை வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகிறோம்.


No comments:
Post a Comment