Translate

Thursday, February 4, 2016

அம்மா எனும் ஒற்றை உறவே...

To N Suresh Chennai 

நேசத்திற்கு பலர் புதிதாய்.
நெஞ்சத்திற்கு தாயோன்றே.
உறவுகள் ஏராளம்- நம்
உயிருக்கு அவளோன்றே.
உணவுகள் சுவைத்திடுவோம்.
ஊட்டிய அமுதத்திற்கு ஈடுண்டோ?
விழி மூடி துயிலெழ, துளியாய்
அவளின்றி இருந்ததுண்டோ?
நினைவுகளின் முன்னும் பின்னும்
தாயவளே முன்னிற்பாள்.
நினைவுகள் பல தொடர்ந்திடினும்
நீக்கமற நிறைந்திருப்பாள்.
தாயின்றி நாமில்லை.
நாமின்றி நம் குடும்பமில்லை.
அவர் நினைவுகளை மனத்திலிறுத்தி,
குடும்பமதை நடத்தி செல்வோம்.


வாழ்க நலமுடன் பல்லாண்டு எமதினிய நண்பரே.

 -தவப்புதல்வன்.

https://www.facebook.com/nsuresh.chennai/posts/1009483255777641?comment_id=1009542605771706&notif_t=mentions_comment

அம்மா எனும் ஒற்றை உறவே...
==============================
நன்றி உணர்வுகளை
கண்ணீராய் பொழிய வைக்கும் அதிசயம்
அம்மாவின் நினைவுகள்!
கோபத்திற்குள் கருணையை
மறைத்து வைத்திருக்கும் பாசத்திறை
அம்மாவின் அன்புள்ளம்!
பிள்ளைகளின் பசியாறியதும்
எப்படித்தான்
அம்மாவின் பட்டினிவயிறு
நிறைகிறதோ மகிழ்ச்சியில் !
பூவே பாரம் எனும் கர்ப காலத்தில்
கருவை சுமக்கும் வலியை
எப்படி சுகித்தார்களோ அம்மா!
ஒற்றை வார்த்தை கவிதை மட்டுமா அம்மா ?
உலக மனிதநேயத்தின்
படைப்பாளி அம்மா!
ஆனால் அதிகமாக மறக்கப்படும்
ஒற்றை உறவு அம்மா
எனினும்
எப்போதும் பிள்ளைகளை நினைக்கும் தவத்தில்
வாழ்த்தும் உள்ளம் அம்மா!
அம்மாவின் மரணத்திற்கு பின்
அவர்களின் நினைவுகளால்
உறங்காத வனமே
எந்தன் மனம்!
அம்மா !
வறுமையின் உச்சியில்
உன்னிடம் என்னை கேட்கவைத்த
பணிவான ஒரு கேள்வி
ஏனம்மா எனக்கு உயிர் தந்தாய்?
பலரின் பசி தீர்க்க என்றாய் கனிவுடன் !
உன் வார்த்தை இன்று உண்மையாகிடினும்
குற்ற உணர்வால் தவிக்கும் என்
உள்ளத்தை மன்னித்தாயே தாயே
உந்தன் பாசம் ததும்பும் தாய்மையை
போற்றி வணங்குகிறேன்!

அன்புடன் என் சுரேஷ் சென்னை

நன்றி: 
 N Suresh Chennai 

No comments: