மகபேறுக்காக மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருக்கும் எங்கள் இளைய
மகள் சௌ.சோபனாவுக்கு, நண்பர்கள் மற்றும் உறவுகளின் வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் அன்புடன்
எதிர்நோக்கி.
சௌ.சோபனா மகவை நலமுடன் ஈன்றெடுக்க.
புற்றெரும்பு குவியலாய்
நினைவுகள் அலைந்தாலும்,
சரம் கோர்த்து ஓர் நினைவு
கொடிபிடித்து நிற்கிறது
பவளமல்லி வண்ணத்திலே
இலவம்பஞ்சு மென்மையில்
பொன்குஞ்சை வரவேற்க
காத்திருக்கிறது அந்நினைவு.
காலம் கரைகிறது
வினாடிகளும் மெதுவாக.
காத்திருப்பில் ஓர் படப்படப்பு.
உணர்வுகளில் ஒரு துடித்துடிப்பு.
நிறைமகவாய்
சுமந்தவள் ஈன்றெடுக்க,
கணக்கிட்ட காலமது
முழுமைடைய நெருங்கியிருக்க,
ஆதியன்னை உடனிருந்து
மடிசுமை இலகுவாக்கி
பிறவிதனை சிரமமின்றி
தந்தருள தாள் பணிந்தோம்.
No comments:
Post a Comment