கொஞ்சும் கிளி கண்டேன்.
கொவ்வைப் பழம் கண்டேன்.
சிப்பிக்குள் இருந்த முத்து
வெளிப்பட்டு மிளிர கண்டேன்.
தலைமுறை உதயமாக
பூக்களெல்லாம் மகிழக் கண்டேன்.
சிந்தனையிலிருந்த மனமது
சிறகடிக்க நான் கண்டேன்.
பாசத்திற்கொரு புது வரவால்
புதிதொரு எல்லை கண்டேன்.
வாழ்வெல்லாம் இனித்திருக்க
உறவெல்லாம் செழித்தோங்க,
நிறைந்திருக்கும் இறையருள்
நித்தமும் உடனிருக்க,
மலையளவு பாசமு(த்து)டன்
மகிழ்வுகள் பெருக்கெடுக்க,
ஆசிகளை மலர் போல
தூவி யாம் வாழ்த்துகிறோம்.
#எங்கள் இளையமகள்
சௌ.சொபனாவுக்கு நேற்று ( 17/02/2016 ) மகவு பிறந்துள்ளது. வாழ்த்திய, பிரார்த்தித்த, ஆசிர்வதித்த
அனைவருக்கும் மகிழ்வுடன் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment