காலம் கடந்த வேகமதை
நினைத்து திரும்பி பார்க்கிறேன்,
கண்கொள்ளா காட்சியான
திருமணக் கோலமதை.
கைக்கோர்த்த நாளினிதில்
நல்லருள் அவனருள,
மகிழ்வுடன் அத்தனையும்
கடக்க வேண்டும் நலனுடனே.
உமதாசிகள் நீங்காமல்
என்றுமே எமக்கிருக்க,
உம் பாதங்களில் பணிந்தோம்
வாழ்த்துரைக்க வயதின்றி.
இருந்தாலும் உரைத்தோமே
எம் மனம் மகிழ, நாவினிக்க.
இனிய திருமண நாள்
நல்வாழ்த்துக்கள் பாவா, அக்கா.
#சென்ற செப்டம்பர் 2, 2015
No comments:
Post a Comment