பக்கங்களில் படைப்புகளை
படைகளாய் சேர்த்துக்கொண்டு,
அனுதினமும் ஆனந்தக்கூத்தாடி
அனுபவித்தே ஆளுகிறீர்.
தமிழன்னை துணையாலே
தவறாத உம் மொழிசொற்கள்,
தாலாட்டாய் நினைவூட்டி
தவழும் எம் நெஞ்சங்களில்.
அமுதூட்டும் தாயாக
ஏறும் படைப்புகள் உமைப்போற்ற,
எங்குமது ஒலிக்கட்டும்.
என்றுமது நிலைக்கட்டும்.
எல்லா நலன்களுடன் நீரிருந்து,
ஏற்றம் மேலும் நீர் காண,
எல்லையில்லா அருள் துணை நிற்க,
பிரார்த்தித்தோம் உமக்காக.
தாமதமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
சக்தி அண்ணா.
அன்புடன்
தவப்புதல்வன்.
No comments:
Post a Comment