உள்ளம் நோக
துடிக்கிறேன்
உண்மை சொல்லி அழுகிறேன்.
உணர்வுகளை அறியாரும்
உறவினரும் ஏற்காரே.
உற்றுத்தான் பார்க்கிறாய்
உறக்கத்திலிருந்து விழித்தது போல்.
உகுக்கும் விழிநீர் கண்டு
உன் கைகளைக் கொட்டி
சிரிக்கின்றாய்.
உன்னிடம் ஏன் அழுதேன்
ஊமையாய் கேட்பாய் என்றா
?
உள்ளது புரியுமென்றா?
உறுதுணையாய் இருப்பாய்
என்றா?
No comments:
Post a Comment