கருக்கொள்ளும்
எண்ணங்கள்
உருக்கொள்ளும்
செயல்விசையாய்.
கற்றுத் தேர்ந்த
அறிஞர்களாய்
உயிர் கொடுப்பீர்
தெய்வங்களாய் (பிரம்மாக்களாய் )
இயக்கும் விசை பலவற்றை
இணைத்து வைப்பீர்
குறியெண் கொண்டே.
சிக்கல்களாய்
செயலிருக்கும்
சிந்தனையில்
மனமிருக்கும்
முடிவினிலே
பொருளிருக்கும்
சிலை வடிவாய்
அதுவிருக்கும்.
அத்தனையும்
கொலுவிருக்க
கைவண்ணம்
அதிலிருக்கும்.
வெற்றி மீது வெற்றிக்
கொண்டே
வெல்கவென வாழ்த்தினேன்
இன்றே.
#25/06/2009 அன்று, எங்கள் மகள் பணி புரிந்த அலுவலகமான Chennai "ORACLE" FAMILY DAY வில், மென்பொறியாளர்களை வாழ்த்திய வாழ்த்து மடல்
No comments:
Post a Comment