பால் குடித்த பாலவயது,
பருவத்திலே பழகத்
துடிக்குது.
பக்குவமாய் வளர்ந்திட
பகுத்தறியும் வயதிது.
பாழாய் போன நினைவுகள்
பந்தாடிப் பார்க்குது.
பழுத்த இந்த வயதிலே
பக்குவம் எய்துமோ ?
பாதையாய் இருக்குமோ
பறந்தந்த காலம்.
பாவமென்று பார்க்குமோ
பரிதவிக்கும்
இந்நிலையிலே.
பஞ்சனை கொஞ்சல்கள்
பரவசமாய் நெஞ்சிலே.
பழகி ருசித்த
நினைவுகள்
பழுதாய் இன்று போனதேன்?
படுத்தது கணக்கில்லை
படுக்கையில் பலமுறை.
பாசியாய்
மருந்தெங்கும்
படர்ந்ததே உடலெங்கும்.
படுத்தலாய் இருக்குமோ
பரலோகம் போகையில்.
பரமனடி சிந்தையால்
பாவங்கள் கழியுமோ ?
No comments:
Post a Comment