இனிப்பிலே கசப்புணர்வு
கசிந்துவரும்
தேனிருந்தால்,
அருகினிலே
வேப்பமரத்
தோப்பிருக்கும்.
பன்னீராய் மனம்
பரப்பும்
இனிப்புமது
கூடியிருக்கும்
ரோசாத்தோட்டம்
அருகிருந்தால்.
பல்சுவை உணர்ந்தாலும்
இனிப்புச்சுவை
கூடியிருக்கும்
மலையிலே தானிருக்கும்
மலைத்தேனாய்
அதுவிருக்கும்.
தேனின் சுவைகளிலே
கொம்பாய் முன்
நிற்கும்
எட்டாத உயரத்திலே
மரத்தின் உச்சியிலே.
அதையே
கொம்புத்தேனேன்பார்.
அறியா சிறுவனெனக்கு
அறிய செய்ய
தெரியவில்லை.
பட்டதை எழுதி
வைத்தேன்,
அறிந்தவர் திருத்திக்
கொடுக்க.
எழுதிய தேதி: 21/06/09
No comments:
Post a Comment