தேர்தல்
ஓட்டு போடுவது
ஜனநாயக கடமையென
ஊருக்கு சென்று
வந்தேன்
இரண்டாயிரம்
செலவழித்து.
என் தோழனும் ஓட்டு
போட்டான்
இரண்டாயிரம்
வாங்கிக்கொண்டு,
ஊருக்கு செல்லாமலே.
-----
தேர்தலுக்கு முன்
வேட்பாளரோ பக்தனாய்
வாக்காளரோ தெய்வமாய்.
-----------
தேர்தலுக்கு பின்
வெற்றிப்பெற்ற
வேட்பாளர்
தெய்வமாய்.
வாக்களித்த வாக்காளர்
பலிகளாய்.
----------------
தேர்வானவர்
தன் தேவைகளை
பெருக்கிக் கொண்டார்.
வாக்களர்களின் கண்களை
வாகாய் மறைத்து.
-------------
வண்ணம்
கரை வேட்டிகளோ
வெள்ளை வெளேர்.
கருமிருட்டாய்
உள்ளிருக்கும் மனம்.
No comments:
Post a Comment