ஆணவம் மட்டும் ஆனது
அறிவுக்கண்
திறக்கவில்லை.
வயதோ ஆனது
உன் மனமோ வளரவில்லை.
உறவுகளின் தன்மையை
பெண்ணே, நீ உணரவில்ல.
என்றுதான் உணர்வாயோ.
ஏற்றம் நீ அடைவாயோ
உணவிலே உடலது வளர்வது போல்
நஞ்சிலே மனத்தை வளர்க்காதே.
ஓடையாய் உன் மனத்தை
எதிர்பார்க்க,
ஒழுகும் பாத்திரமாய்
ஆனதேன் ?
குற்றமில்லையோ உன்னை
சொல்லி.
உன் வளர்ப்பு அப்படியோ?
அன்னையவள் விதைத்தாளோ
/ வளர்த்தாளோ
அன்னத்திலே விசவிதையை ஊன்றியவள்
No comments:
Post a Comment